மேலும் அறிய

Watch Video: 41 வயதில் லாங் டைவ்..! ஜெய்ஸ்வால் கேட்ச்சை தாவி பிடித்த ஆண்டர்சன்.. வைரலாகும் வீடியோ!

ஜேம்ஸ் ஆண்டர்சன் பிடித்த இந்த கேட்ச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, ஜேம்ஸ் ஆண்டர்சன் ட்விட்டர் பக்கத்தில் டிரெண்டிங்கில் இருக்கிறார். 

ராஞ்சியில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. நான்காவது நாளான இன்று காலை மீண்டும் தொடங்கிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது/ 

நேற்றைய நாளில் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியாவின் ஸ்கோர் 40 ரன்களாக இருந்தது. அதனை தொடர்ந்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்தது. 

இந்தநிலையில், அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 44 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஜோ ரூட்டின் பந்தை தூக்கி அடிக்க பார்த்த ஜெய்ஸ்வால் பேட்டில் பந்து பட்டு பின்னோக்கி சென்றது. அப்போது, 41 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் பறந்து அந்த பந்தை பிடித்தார். இந்த கேட்சால் பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் உள்ளிட்ட  இந்திய ரசிகர்களால் நம்ப முடியவில்லை. 

ஜேம்ஸ் ஆண்டர்சன் பிடித்த இந்த கேட்ச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, ஜேம்ஸ் ஆண்டர்சன் ட்விட்டர் பக்கத்தில் டிரெண்டிங்கில் இருக்கிறார். 

இந்திய அணி வெற்றி: 

ராஞ்சி டெஸ்டில் இங்கிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இருப்பினும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற கடுமையாக போராட வேண்டியிருந்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சற்று தடுமாறினார்கள் என்பதே உண்மை. ஆனால் இறுதியில் சுப்மன் கில் மற்றும் துருவ் ஜூரல் ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 

இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்தனர். ரோகித் சர்மா 55 ரன்களில் ஆட்டமிழக்க, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 37 ரன்கள் எடுத்தார். ஆனால் இதற்குப் பிறகு இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வேகமாக பெவிலியன் திரும்பினர்.

அடுத்தடுத்து 5 இந்திய பேட்ஸ்மேன்கள் 120 ரன்களை எட்டிய பின் பெவிலியன் அடைந்தனர். இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்கு பெரும் சவாலாக மாறினார்கள். ஆனால் சுப்மன் கில் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் அற்புதமான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி இங்கிலாந்தின் திட்டங்களை சிதைத்தனர். சுப்மன் கில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் திரும்பினார். துருவ் ஜூரல் 39 ரன்களில் முக்கியமான இன்னிங்ஸ் விளையாடினார். இக்கட்டான நிலைமையில் சுப்மன் கில் மற்றும் துருவ் ஜூரல் இடையே ஆறாவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தனர். 

இங்கிலாந்து அணி சார்பில் சோயிப் பஷீர் 3 விக்கெட்களும், ஜோ ரூட் மற்றும் டாம் ஹார்ட்லி தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget