WTC Final 2023 Prize Money: அம்மாடியோவ்.. இந்த ஒரு போட்டியை வென்றால் இவ்வளவு பரிசுத் தொகையா? இந்தியாவுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு..!
WTC Prize Money: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரினை வெல்லும் அணிக்கான பரிசுத் தொகையினை சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
![WTC Final 2023 Prize Money: அம்மாடியோவ்.. இந்த ஒரு போட்டியை வென்றால் இவ்வளவு பரிசுத் தொகையா? இந்தியாவுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு..! WTC Final 2023 Prize Money Winner To Earn Rs 13.23 Crore ICC Prize Money For World Test Championship Final WTC Final 2023 Prize Money: அம்மாடியோவ்.. இந்த ஒரு போட்டியை வென்றால் இவ்வளவு பரிசுத் தொகையா? இந்தியாவுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/26/f26a36a9aea8d0d6b0a9ee6591caceab1685099596621728_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
WTC Prize Money: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரினை வெல்லும் அணிக்கான பரிசுத் தொகையினை சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் இந்திய அணியும் மோதவுள்ளன. இந்த போட்டிக்காக தயாராகுதல் பணியை ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே தொடங்கியுள்ளது. இந்திய அணி தரப்பில் இரண்டு கட்டங்களாக லண்டன் செல்லவுள்ளனர். இதில் முதல் தவணையாக பந்து வீச்சாளர்கள் குழு அங்கு சென்றுள்ளது. மீதமுள்ளவர்கள் ஐபிஎல் தொடர் முடிந்ததும் செல்லவுள்ளனர்.
இந்நிலையில் ஐசிசி தரப்பில் இருந்து இந்த தொடருக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசுத் தொகை இந்த தொடரில் கலந்து கொண்ட அனைத்து அணிகளுக்கும் அவர்கள் எட்டியுள்ள இடத்தினை பொறுத்து பிரித்து வழங்கப்படவுள்ளது. ஐசிசி தரப்பில் ஒட்டுமொத்தமாக 3.8 மில்லியன் அமெரிக்க டலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது இதற்கு முன்னர் நடைபெற்ற 2019 - 2021 தொடரின் போது வழங்கப்பட்ட அதே தொகை தான்.
இந்நிலையில், முதல் இடத்தினைப் பிடிப்பவர்களுக்கு கோப்பையுடன் 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படவுள்ளது. இந்த தொகையின் இந்திய மதிப்பு இன்றை கணக்கின்படி, ரூபாய் 13.23 கோடி வழங்கப்படும். அதேபோல், இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூபாய் 6.6 கோடி ஆகும்.
மூன்றாவது இடத்தினைப் பிடித்துள்ள தென் ஆப்ரிக்க அணிக்கு 4.5 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படவுள்ளது. இந்த வரிசையில் நான்காவது இடம் பிடித்துள்ள இங்கிலாந்து அணிக்கு 3.5 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளன. ஐந்தாவது இடத்தினைப் பிடித்த இலங்கை அணி இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் தொகையை பரிசாகப் பெறவுள்ளது.
இந்த தோடரில் கலந்து கொண்ட அனைத்து அணிகளுக்கும் பரிசுத் தொகை வழங்கப்படும். மொத்தம் களமிறங்கிய 9 அணிகளுகளில் இறுதி நான்கு இடங்களைப் பிரித்த நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு தலா ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது.
கடந்த 2019 - 2021 தொடரில் முதல் இடம் பிடித்து பதக்கத்துடன் பரிசுத்தொகையை வென்ற நியூசிலாந்து அணி இம்முறை 6வது இடத்தினைப் பெற்று ஒரு லட்சம் அமெடிக்க டாலர்கள் தான் பரிசுத்தொகையாகப் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)