WPL Auction 2023 GG: ஆண்கள் அணியைப் போல அறிமுக தொடரிலே கோப்பையை கைப்பற்றுமா குஜராத்..? பலம், பலவீனம் என்ன?
WPL Auction 2023 Gujarat Giants: கடந்த முறை ஆண்கள் ஐபிஎல் கோப்பையை வென்ற அணியான குஜராத் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த அணி ஏலத்திற்கு பின் எப்படி உள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
பல வருடங்களாக திட்டமிடப்பட்டு வந்த பெண்களுக்கான ஐபிஎல் எப்போது நடைபெறும் என்று காத்திருந்த நிலையில் அதற்கான அணிகள் முடிவு செய்யப்பட்டு, ஏலமும் விடப்பட்டுள்ளது. எல்லா அணிகளும் ஸ்டார் வீரர்களை வாங்க முட்டிக்கொண்டு நிலையில் ஒரு வழியாக எல்லா அணிகளும் 15 முதல் 18 வீராங்கனைகளை ஏலத்தில் எடுத்து போட்டிக்கு தயாராகி உள்ளனர்.
எதிர்பார்த்தது போலவே ஸ்ம்ரிதி மந்தனாவை வாங்க அணிகள் போட்டி போட்ட நிலையில், பெங்களூரு அவரை 3.40 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் சென்ற நபராக அவர் பெயர் பெற்றார். மேலும் ஹர்மன் ப்ரீத் கவுர், எல்லிஸ் பெர்ரி ஆகியோரும் கோடிக்கணக்கில் ஏலம் சென்றனர். இப்போது ரசிகர்களின் கேள்வி என்னவென்றால் ஒவ்வொரு அணியும் சரியாக வீரங்கனைகளை எடுத்துள்ளனரா? வெற்றி பெருவதற்குரிய பேலன்ஸ் அணியில் உள்ளதா? என்பதுதான்.
குஜராத் ஜெயண்ட்ஸ்
அதிலும் கடந்த முறை ஆண்கள் ஐபிஎல் கோப்பையை வென்ற அணியான குஜராத் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த அணி ஏலத்திற்கு பின் எப்படி உள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
வாங்கிய வீரர்களின் எண்ணிக்கை: 18
செலவிடப்பட்ட பணம்: 11.5 கோடி ரூபாய்
முக்கிய வீரர்கள்
டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ஸ்னேஹ் ராணா பரந்த அனுபவம் கொண்டிருப்பதால், அவர் தொடக்க WPL இல் குஜராத் ஜெயண்ட்ஸுக்கு ஒரு சக்திவாய்ந்த வீராங்கனையாக இருப்பார் என்று எதிர்பார்க்கலாம். அவர் இரயில்வே அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த நூஷின் அல் காதீருடன் மீண்டும் இணைந்த நிலையில், தேசிய அமைப்பில் ராணாவின் இரண்டாவது வருகையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் T20I களில் சிறந்த பந்துவீச்சு புள்ளிவிவரங்களை எடுத்த சில நாட்களுக்குப் பிறகு, குஜராத் அணி அவரை 3.2 கோடிக்கு (சுமார் 390,000 டாலர்) ஏலத்தில் எடுத்துள்ளது. அவர் இந்த ஏலத்தின் விலையுயர்ந்த வெளிநாட்டு வீரராக மாறியுள்ளார். DY பாட்டீல் ஸ்டேடியம் மற்றும் பிரபோர்ன் ஸ்டேடியத்தில் உள்ள மேற்பரப்புகள் நல்ல ஸ்ட்ரோக்பிளேக்கு உதவுகின்றன, அது ஒரு ஹிட்டராக அவருக்கு நன்மை பயக்கும். மேலும் பந்து வீச்சிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.
𝗧𝗵𝗲 1️⃣8️⃣ 𝗹𝗶𝗼𝗻𝗲𝘀𝘀𝗲𝘀 𝗿𝗲𝗮𝗱𝘆 𝘁𝗼 𝗿𝗼𝗮𝗿! 💪#Giant squad is 🔒 | #GiantArmy, which signing you loved the most? ☺#WPL #WPLAuction pic.twitter.com/Q1DTU5Rh24
— Gujarat Giants (@GujaratGiants) February 13, 2023
பலம் மற்றும் பலவீனம்
பலம்: டீன்ட்ரா டோட்டின் மற்றும் அனாபெல் சதர்லேண்டில் உள்ளிட்ட சில சீம்-பவுலிங் ஆல்ரவுண்டர்களைத் தேர்ந்தெடுத்தது பெரும் ப்ளஸ்.
பலவீனம்: இந்திய அணியில் இருந்து அனுபவமுள்ள வீரர்கள் குறைவு. ஹர்லீன் தியோல், எஸ் மேகனா மற்றும் டி ஹேமலதா ஆகியோரை காயங்கள் இன்றி கொண்டு செல்ல வேண்டும். நெருக்கடியான சூழ்நிலையிலோ அல்லது சில எதிர்பாராத காயச் சிக்கல்களிலோ சிக்கினால் பேக்-அப் இந்திய பேட்டர் அவர்களிடம் இல்லை என்பதுதான் உண்மை.