(Source: Poll of Polls)
Watch Video: வீடியோ கால் செய்த விராட் கோலி என்ன சொன்னார்..? சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த ஸ்மிருதி மந்தனா!
ஆர்சிபி சாம்பியன் பட்டத்தை வென்றதும் மகளிர் பெங்களூரு அணிக்கு வீடியோ கால் மூலம் விராட் கோலி வாழ்த்து தெரிவித்தார்.
மகளிர் பிரீமியர் லீக்கில் ஸ்மிருதி மந்தனாவின் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மெக் லானிங் தலைமையிலான டெல்லியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியால் ஆர்சிபி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆர்சிபி சாம்பியன் பட்டத்தை வென்றதும் மகளிர் பெங்களூரு அணிக்கு வீடியோ கால் மூலம் விராட் கோலி வாழ்த்து தெரிவித்தார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Virat Kohli was literally dancing on the video call. This Trophy matters sooo much to him pic.twitter.com/QfDnmbgbAT
— Pari (@BluntIndianGal) March 18, 2024
வெற்றிக்குப் பிறகு விராட் கோலி வீடியோவில் என்ன பேசினார் என்பது குறித்து ஸ்மிருதி மந்தனா வெளிப்படுத்தியுள்ளார்.” பெங்களூரு அணி வெற்றிக்கு பிறகு ரசிகர்கள் அதிகபடியான அன்பை கொடுத்தனர். இதனால் எழுந்த சத்தம் காரணமாக விராட் கோலி அண்ணாவின் சத்தத்தை என்னால் கேட்க முடியவில்லை. அவர் புன்னகையுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தா. கடந்த 16 - 17 ஆண்டுகளாக விராட் கோலி பெங்களுர் அணியில் இருந்து வருகிறார். இதில் ஒரு அங்கமாக இருந்ததால் அவரது முகத்தில் அந்த மகிழ்ச்சியை என்னால் காண முடிந்தது” என தெரிவித்தார்.
விராட் கோலியின் வீடியோ அழைப்பின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து, விராட் கோலி என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது. அந்த வீடியோவில் விராட் கோலி நடனமாடுவதை காண முடிந்தது. ஐபிஎல் 2024 17வது சீசனாவது வருகின்ற 22ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மோத இருக்கின்றன. தொடர்ந்து வெற்றிபெற்று பெங்களூரு அணிகள் இந்த சாம்பியன் பட்டத்தை வெல்லுமா..? இல்லையா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உற்சாகத்தில் ரசிகர்கள்:
நீண்ட நாட்களாக கோப்பையை வெல்லாத அணிக்கு ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் மிகுந்த உற்சாகத்துடன் ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால் தற்போது ஆர்சிபி மகளிர் அணி கோப்பை வடிவில் ரசிகர்களுக்கு பெரிய பரிசை வழங்கியுள்ளது. மகளிர் பிரீமியர் லீக்கில் (WPL 2024), ஆர்சிபி அணி டெல்லி கேபிடல்ஸை வீழ்த்தி பட்டத்தை வென்றது.
MADNESS IN BANGALORE 🤯
— Johns. (@CricCrazyJohns) March 17, 2024
- ONE OF THE BEST FANS IN SPORTING HISTORY.pic.twitter.com/mDQB1lz0fu
ABSOLUTE CRAZY SCENES IN BANGALORE 🔥🤯pic.twitter.com/AaOFbdCPm5
— Johns. (@CricCrazyJohns) March 17, 2024
ஆர்சிபி வெற்றி பெற்றதையடுத்து பெங்களூருவில் ரசிகர்கள் தெருக்களில் ஊர்வலம் வந்தனர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சாலையில் ஏராளமான ரசிகர்கள் நடந்து சென்றும், நடனமாடியும் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். மேலும், சாலை முழுவதும் நடந்து கொண்டே'ஆர்சிபி' 'ஆர்சிபி' என்று சத்தமாக கோஷமிட்டனர்.
அசத்திய ஆர்சிபி:
கடந்த சீசனில் ஆர்சிபி மகளிர் அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட செல்ல முடியவில்லை. ஆனால் இந்த முறை அந்த அணி சிறப்பாக செயல்பட்டது. ஸ்மிருதி மந்தனா தலைமையிலான அணி, லீக் கட்டத்தின் சவால்களை முறியடித்தது. அதன் பிறகு, எலிமினேட்டரில் குஜராத் அணிக்கு எதிராக வெற்றியைப் பதிவுசெய்து, இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது.