மேலும் அறிய

DC VS MI WPL 2024: அரைசதம் விளாசிய ஆலிஸ் கேப்ஸி...மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 172 ரன்கள் இலக்கு!

மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 172 ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இலக்காக வைத்துள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் 2024:

இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. உலகளவிலும் ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் அதிகம். ஆண்களுக்கு மட்டுமே ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வந்த நிலையில், மகளிருக்கும் இது போன்ற தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் அறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் மகளிர் பிரீமியர் லீக்கின் 2-வது சீசன் பெங்களூருவில் இன்று தொடங்கியது. இந்த தொடரிலும் டெல்லி, குஜராத், மும்பை, பெங்களூர், யு.பிஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

அரைசதம் விளாசிய ஆலிஸ் கேப்ஸி:

அந்த வகையில் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இன்று தொடங்கிய இந்த தொடரின் முதல் லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. அதன்படி, டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேப்டன் மெக் லானிங் மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள்.  இதில் 8 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற ஷஃபாலி வர்மா மும்பை இந்தியன்ஸ் அணி வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயில் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர், மெக் லானிங் உடன் ஜோடி சேர்ந்தார் ஆலிஸ் கேப்ஸி. இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினார்கள். இதில், மெக் லானிங் 25 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் பறக்கவிட்டு மொத்தம் 31 ரன்கள் எடுத்து நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் ஆலிஸ் கேப்ஸியுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தார்.

அந்த வகையில் இந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் அரைசதத்தை பதிவு செய்தார் ஆலிஸ் கேப்ஸி. அந்தவகையில் மொத்தம் 53 பந்துகள் களத்தில் நின்ற அவர் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 75 ரன்களை குவித்தார். அதேபோல் மற்றொரு புறம் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார் ஜெமிமா ரோட்ரிக்ஸ். இதனிடையே சதம் விளாசுவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட ஆலிஸ் கேப்ஸி 75 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவ்வாறாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்க உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IPL 2026: மும்பையை பொளந்துகட்டிய ஆர்சிபி..! வீக் எண்டில் ஐபிஎல் புள்ளிப்பட்டியல் நிலவரம் - யாருக்கு எந்த இடம்?
IPL 2026: மும்பையை பொளந்துகட்டிய ஆர்சிபி..! வீக் எண்டில் ஐபிஎல் புள்ளிப்பட்டியல் நிலவரம் - யாருக்கு எந்த இடம்?
IPL 2026 RCB vs MI: ஒரே ஓவரில் 2 முறை அவுட்! ஆனாலும் அவுட்டாகாத ரூதர்ஃபோர்ட்! மும்பை - ஆர்சிபி போட்டியில் சுவாரஸ்யம்!
IPL 2026 RCB vs MI: ஒரே ஓவரில் 2 முறை அவுட்! ஆனாலும் அவுட்டாகாத ரூதர்ஃபோர்ட்! மும்பை - ஆர்சிபி போட்டியில் சுவாரஸ்யம்!
Sooryavanshi: யாரு போட்டாலும் அடிப்பேன்! லெஜண்ட் பவுலர்களுக்கே தலைவலியாக உருவெடுத்த சூர்யவன்ஷி!
Sooryavanshi: யாரு போட்டாலும் அடிப்பேன்! லெஜண்ட் பவுலர்களுக்கே தலைவலியாக உருவெடுத்த சூர்யவன்ஷி!
Mukul Choudhary: குட்டிப்பயா யாருடா நீ? ”பிறப்பதற்கு முன்பே கிரிக்கெட்டராக சபதம்” தோனியின் சிஷ்யன் முகுல் சவுத்ரி
Mukul Choudhary: குட்டிப்பயா யாருடா நீ? ”பிறப்பதற்கு முன்பே கிரிக்கெட்டராக சபதம்” தோனியின் சிஷ்யன் முகுல் சவுத்ரி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GOLD SILVER RATE Apr. 13th: சபாஷ்.! வாரத்தின் முதல் நாளிலேயே சரிந்த தங்கம், வெள்ளி விலை; தற்போது எவ்வளவு தெரியுமா.?
சபாஷ்.! வாரத்தின் முதல் நாளிலேயே சரிந்த தங்கம், வெள்ளி விலை; தற்போது எவ்வளவு தெரியுமா.?
Ramadoss: மூன்றாவது மருத்துவமனைக்கு மாற்றப்படும் ராமதாஸ் - ஆம்புலன்ஸில் சென்னை பயணம் - என்ன ஆச்சு?
Ramadoss: மூன்றாவது மருத்துவமனைக்கு மாற்றப்படும் ராமதாஸ் - ஆம்புலன்ஸில் சென்னை பயணம் - என்ன ஆச்சு?
TN Election 2026: போடுங்கம்மா ஓட்டு! இன்னும் 10 நாள்தான் இருக்கு! சுத்தி சுத்தி ஓட்டு கேட்கும் அரசியல் கட்சிகள்!
TN Election 2026: போடுங்கம்மா ஓட்டு! இன்னும் 10 நாள்தான் இருக்கு! சுத்தி சுத்தி ஓட்டு கேட்கும் அரசியல் கட்சிகள்!
USA Iran War: ”நீ வேணா வந்து பாரு, பேசிட்டு இருக்க மாட்டோம்” அமெரிக்காவிற்கு ஈரான் வார்னிங் - நாரதர் வேலை
USA Iran War: ”நீ வேணா வந்து பாரு, பேசிட்டு இருக்க மாட்டோம்” அமெரிக்காவிற்கு ஈரான் வார்னிங் - நாரதர் வேலை
ஏப்ரல் 15 முதல் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்! 14-ஆம் தேதி நள்ளிரவுக்குள் கரை திரும்ப உத்தரவு
ஏப்ரல் 15 முதல் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்! 14-ஆம் தேதி நள்ளிரவுக்குள் கரை திரும்ப உத்தரவு
Tamilnadu Roundup: நிர்மலா சீதாராமனுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி! மயங்கி விழுந்த ராமதாஸ் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: நிர்மலா சீதாராமனுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி! மயங்கி விழுந்த ராமதாஸ் - தமிழகத்தில் இதுவரை
IPL 2026: மும்பையை பொளந்துகட்டிய ஆர்சிபி..! வீக் எண்டில் ஐபிஎல் புள்ளிப்பட்டியல் நிலவரம் - யாருக்கு எந்த இடம்?
IPL 2026: மும்பையை பொளந்துகட்டிய ஆர்சிபி..! வீக் எண்டில் ஐபிஎல் புள்ளிப்பட்டியல் நிலவரம் - யாருக்கு எந்த இடம்?
Car Discontinued: ஒரே அடியாக 4 பட்ஜெட் கார்களின் விற்பனையை நிறுத்திய முன்னணி ப்ராண்ட் - என்ன காரணம்?
Car Discontinued: ஒரே அடியாக 4 பட்ஜெட் கார்களின் விற்பனையை நிறுத்திய முன்னணி ப்ராண்ட் - என்ன காரணம்?
Embed widget