மேலும் அறிய

WPL 2023: முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் மும்பை.. ஆரஞ்சு கேப், பர்ப்பிள் கேப் யார் யாரிடம் வசம்..? முழு பட்டியல் இதோ!

ஆரஞ்சு கேப்பிற்கான பந்தயத்தில் மட்டுமல்ல, ஹேலி மேத்யூஸ் பரப்பிள் கேப்பிற்கான பந்தயத்திலும் உள்ளார். அவர் பர்பிள் கேப் தரவரிசையில் சைகா இஷாக்கிற்கு கீழே இரண்டாவது இடத்தில் உள்ளார்.

மகளிர் பிரீமியர் லீக் (WPL) முதல் சீசனில் இதுவரை தோல்வியே அடையாத இரு அணி அணிகளான மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் (DC) இடையே நேற்று (மார்ச் 9) DY பாட்டீல் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸில் பலப்பரீட்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதிலும் முழுவதுமாக ஆதிக்கம் செய்த MI பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. DC அவர்களது முதல் தோல்வியை தழுவினர். மெக் லானிங் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார், ஆனால் பவர்பிளேயிலேயே DC 31-3 என்று வீழ்ந்தது. 

மும்பையிடம் டெல்லி படுதோல்வி

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான அணிக்கு 106 ரன்கள் இலக்கை நிர்ணயித்த நிலையில், மூன்று வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்கத்தைக் கடந்தனர். தொடர்ந்து ஆடிய மும்பை அணியின் யாஸ்திகா பாட்டியா மற்றும் ஹெய்லி மேத்யூஸ் மீண்டும் வலுவான தொடக்கத்தை அளித்தனர். இந்த ஜோடி 65 ரன்கள் தொடக்க பார்ட்னர்ஷிப்பை பதிவு செய்தது. இதில் இளம் இந்திய தொடக்க ஆட்டக்காரர் முதல் அரைசதத்தை தவறவிட்டார். நாட் ஸ்கோவர்-பிரண்ட் மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் இருவரும் இணைந்து எளிதாக ரன்னை சேஸ் செய்ய, MI-யை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெற்றது. வெறும் 15 ஓவர்களிலேயே அவர்கள் இந்த இலக்கை எட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மும்பை அணி தங்களது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தனர். மேலும் WPL அட்டவணையின் டாப் இடத்தை அழுத்தமாக பதித்தனர்.

WPL 2023: முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் மும்பை.. ஆரஞ்சு கேப், பர்ப்பிள் கேப் யார் யாரிடம் வசம்..? முழு பட்டியல் இதோ!

டெல்லி கேப்டனிடம் ஆரஞ்ச் கேப் 

ஆனால் DCக்கு ஒரே நல்ல விஷயம், கேப்டன் மெக் லானிங் WPL ஆரஞ்சு கேப் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். சூழலை புரிந்து ஆடிய அவர் 43 ரன்கள் குவித்து அணியை 100-ஐத் தாண்ட வைதார். இருப்பினும், தொடர்ச்சியாக மூன்று அரைசதங்கள் அடிக்கும் வாய்ப்பை அவர் சிறிது நேரத்தில் தவறவிட்டார். மூன்று போட்டிகளுக்குப் பிறகு அவரது மொத்த ரன் எண்ணிக்கை 185 ஆக உயர்ந்தது.

தொடர்புடைய செய்திகள்: Nawazuddin Siddiqui: “மகளுக்கு பாலியல் தொல்லை தந்த மேலாளரை நம்புகிறீர்கள்” - மீண்டும் புயலை கிளப்பிய நவாசுதீன் முன்னாள் மனைவி!

சரிந்த ஷெஃபாலி

ஷெஃபாலி வர்மா தொடர்ந்து இரண்டாவது மோசமான ஆட்டத்தை பதிவு செய்து ஆரஞ்சு கேப் தரவரிசையில் சில இடங்கள் சரிந்தார். அவர் இந்த போட்டியில் இரண்டு ரன்களை மட்டுமே சேர்த்தார், அவரது மொத்த ரன்கள் இப்போது 103 ஆக உள்ளது. ஹெய்லி மேத்யூஸ் ரன் சேஸின் போது ஒரு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அவர் மூன்று போட்டிகளுக்குப் பிறகு 156 ரன்கள் குவித்துள்ளார். அதே சமயம் அவரது சக வீரரான நாட் ஸ்கோவர்-ப்ரன்ட் கடைசியாக வந்து அதிரடி காட்டியதால், முதல் ஐந்தில் நுழைந்துள்ளார்.

WPL 2023: முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் மும்பை.. ஆரஞ்சு கேப், பர்ப்பிள் கேப் யார் யாரிடம் வசம்..? முழு பட்டியல் இதோ!

பர்ப்பிள் கேப்

பர்ப்பிள் கேப் ஹோல்டர் சைகா இஷாக், டெல்லியின் பெரிய மூன்று விக்கெட்டுகளான மெக் லானிங், ஷஃபாலி வர்மா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோரை வீழ்த்தினார். இதன்மூலம் WPL பர்பிள் கேப் தரவரிசையில் முன்னிலையை மேலும் நீட்டித்தார். அவர் தனது மூன்று ஓவர்களில் 3-13 என்ற கணக்கில் முடித்தார், அதுமட்டுமின்றி ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரஞ்சு கேப்பிற்கான பந்தயத்தில் மட்டுமல்ல, ஹேலி மேத்யூஸ் பரப்பிள் கேப்பிற்கான பந்தயத்திலும் உள்ளார். அவர் பர்பிள் கேப் தரவரிசையில் சைகா இஷாக்கிற்கு கீழே இரண்டாவது இடத்தில் உள்ளார். தொடர்ந்து இரண்டாவது போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி ஆறு விக்கெட்டுகளுடன் உள்ளார். இஸ்ஸி வோங், மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது விக்கெட் எண்ணிக்கையை நான்காக உயர்த்தி ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
CM Stalin:
"ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை நிறுத்துக” - மத்திய அரசை வலியுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
RahulGandhi On EVM : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க சொன்ன மஸ்க்.. ஆதரவுக்கரம் நீட்டிய ராகுல் காந்தி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க சொன்ன மஸ்க்.. ஆதரவுக்கரம் நீட்டிய ராகுல் காந்தி
Embed widget