WPL 2023 Points Table: தொடரில் இருந்து வெளியேறியதா பெங்களூரு? புள்ளி பட்டியல் சொல்வது என்ன? முழு லிஸ்ட் இதோ!
நேற்றைய போட்டிக்கு பிறகு மகளிர் பிரிமீயர் லீக்கில் எந்தெந்த அணி எந்தெந்த இடத்தை பிடித்துள்ளது என்பதை கீழே காணலாம்.
மகளிர் பிரிமீயர் லீக்கின் முதல் சீசன் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை அனைத்து தரப்பு கிரிக்கெட் ரசிகர்களும் மிகவும் எதிர்பார்த்தனர். இருப்பினும், இந்த சீசனில் பெங்களூர் அணிதான் முதல் அணியாக வெளியேற இருக்கிறது.
கடந்த மாதம் நடைபெற்ற ஏலத்தில் ஸ்மிருதி மந்தனாதான் அதிக விலைக்கு வாங்கப்பட்டார். அதனைதொடர்ந்து அவருக்கு கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது. ஆனால், இந்த முதல் சீசனானது மந்தனாவுக்கு பேட்டிங்கும் சிறப்பாக அமையவில்லை, கேப்டன்ஷியும் சிறப்பாக விளையாடவில்லை.
விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து அதிர்ச்சி அளித்தது. பெங்களூர் அணியை தவிர மீதமுள்ள 4 அணிகளும் புள்ளி பட்டியலில் குறைந்தது 2 புள்ளிகளையாவது பெற்றுள்ளது. ஆனால், இன்னும் பெங்களூர் அணி புள்ளி பட்டியலில் அடியெடுத்து கூட வைக்கவில்லை.
இந்தநிலையில், மகளிர் பிரிமீயர் லீக்கில் எந்தெந்த அணி எந்தெந்த இடத்தை பிடித்துள்ளது என்பதை கீழே காணலாம்.
தொடர்ந்து முதலிடத்தில் மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் முதல் சீசனில், பெங்களூர் அணி இன்னும் ஒரு போட்டிகளில் கூட வெற்றி பெறவில்லை. அதேபோல், மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் இந்த சீசனில் ஒரு தோல்வியை கூட சந்திக்கவில்லை. இதையடுத்து, கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டிகளில் வெற்றிபெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. டெல்லி அணி 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் இரண்டாவது இடத்திலும், உ.பி., அணி 3 போட்டிகளில் 2ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியுடன் 4 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் +0.509 உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
கடைசி இடத்தில் பெங்களூரு:
குஜராத் ஜெயண்ட்ஸ் அணி தற்போது 2 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் -2.327 உடன் புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இதுவரை இந்த அணி 3 போட்டிகளில் 2ல் தோல்வியடைந்து 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மகளிர் பிரிமியர் லீக் தொடரின் இந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை மோசமான நிலையில் உள்ளது. இந்த அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் அதாவது பூஜ்ஜிய புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
புள்ளிப்பட்டியல்:
குழு | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ரன் ரேட் |
மும்பை இந்தியன்ஸ் | 3 | 3 | 0 | 6 | +4.228 |
டெல்லி கேபிடல்ஸ் | 3 | 2 | 1 | 4 | +0.965 |
UP வாரியர்ஸ் | 3 | 2 | 1 | 4 | +0.509 |
குஜராத் ஜெயண்ட்ஸ் | 3 | 1 | 2 | 0 | -2.327 |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 4 | 0 | 4 | 0 | -2.648 |
மீதமுள்ள போட்டி விவரங்கள்:
DATE | போட்டி விவரம் | நேரம் | இடம் |
மார்ச்-11 | குஜராத் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் | 07:30 PM IST | DY பாட்டீல் ஸ்டேடியம் |
மார்ச்-12 | UP வாரியர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் | 07:30 PM IST | பிரபோர்ன் - சிசிஐ |
மார்ச்-13 | டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 07:30 PM IST | DY பாட்டீல் ஸ்டேடியம் |
மார்ச்-14 | மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் | 07:30 PM IST | பிரபோர்ன் - சிசிஐ |
மார்ச்-15 | UP வாரியர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 07:30 PM IST | DY பாட்டீல் ஸ்டேடியம் |
மார்ச்-16 | டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் | 07:30 PM IST | பிரபோர்ன் - சிசிஐ |
மார்ச்-18 | மும்பை இந்தியன்ஸ் vs UP வாரியர்ஸ் | 03:30 PM IST | DY பாட்டீல் ஸ்டேடியம் |
மார்ச்-18 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs குஜராத் ஜெயண்ட்ஸ் | 07:30 PM IST | பிரபோர்ன் - சிசிஐ |
மார்ச்-20 | குஜராத் ஜெயண்ட்ஸ் vs UP Warriorz | 03:30 PM IST | பிரபோர்ன் - சிசிஐ |
மார்ச்-20 | மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் | 07:30 PM IST | DY பாட்டீல் ஸ்டேடியம் |
மார்ச்-21 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் | 03:30 PM IST | DY பாட்டீல் ஸ்டேடியம் |
மார்ச்-21 | UP வாரியர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் | 07:30 PM IST | பிரபோர்ன் - சிசிஐ |
மார்ச்-24 | எலிமினேட்டர் | 07:30 PM IST | DY பாட்டீல் ஸ்டேடியம் |
நாக் அவுட் சுற்றுகள்:
- மார்ச் 24- எலிமினேட்டர் போட்டி
- மார்ச் 26 - இறுதிப் போட்டி