மேலும் அறிய

Womens T20 World Cup: ஆஸ்திரேலியாவை புரட்டியெடுக்க புயலாய் களமிறங்கும் இந்திய அணி.. பயிற்சி ஆட்டத்தில் இன்று மோதல்..!

Women's T20 World Cup 2023 Warm Up Match: மகளிர் டி20 உலகக் கோப்பையில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா  5 முறையும், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தலா ஒரு முறையும் பட்டத்தை வென்றுள்ளன.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2023: 

மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 பிப்ரவரி 10 முதல் தொடங்குகிறது. தகுதிபெற்ற 10 அணிகளும் தயாராக உள்ள  நிலையில், மொத்தம் 23 போட்டிகளானது 27 நாட்கள் நடைபெற இருக்கிறது.  அனைத்து அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளில் விளையாட வேண்டும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மகளிர் T20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெறும். அதன் பிறகு நான்கு அணிகள் பிளேஆஃப்களில் மோதும்.

மகளிர் டி20 உலகக் கோப்பையின் 8வது சீசன் இதுவாக்கும். நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இம்முறையும் பட்டத்தை வெல்ல காத்திருக்கிறது. இதுவரை மகளிர் டி20 உலகக் கோப்பையில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா  5 முறையும், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தலா ஒரு முறையும் பட்டத்தை வென்றுள்ளன. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் இந்திய அணி முதல்முறையாக இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்ல காத்திருக்கின்றனர். 

இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வருகின்ற 12ம் தேதி எதிர்கொள்கிறது. இதையடுத்து இந்த தொடருக்கு தயாராகும் வகையில் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் தகுதிபெற்ற 10 அணிகளும் தலா 2 பயிற்சி போட்டிகளில் இன்றும், நாளை மறுதினமும் விளையாட இருக்கின்றன. இந்திய அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இன்று மாலை 6 மணிக்கு எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸில் நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் மகளிர் டி20 உலகக் கோப்பை வார்ம் அப் போட்டியை நேரடியாக ஒளிபரப்பக்கூடிய தளத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்னும் உறுதிப்படுத்தவில்லை. 

இந்திய அணி விவரம் : 

ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), யாஸ்திகா பாட்டியா, ஹர்லீன் தியோல், ரிச்சா கோஷ், ராஜேஸ்வரி கயக்வாட், ஷிகா பாண்டே, ஜெமிமா ரோட்ரிக்ஸ், அஞ்சலி சர்வானி, தீப்தி ஷர்மா, ரேணுகா தாக்குர், தேவிகா வஸ்த்ரா, ஷாஃபா வெர்மா வைத்யா , ராதா யாதவ் இருப்பு: சப்பினேனி மேகனா, சினே ராணா, மேக்னா சிங்

ஆஸ்திரேலிய அணி விவரம் : 

மெக் லானிங் (கேப்டன்), அலிசா ஹீலி (துணை கேப்டன்), டார்சி பிரவுன், ஆஷ்லே கார்ட்னர், கிம் கார்த், ஹீதர் கிரஹாம், கிரேஸ் ஹாரிஸ், ஜெஸ் ஜோனாசென், அலனா கிங், தஹ்லியா மெக்ராத், பெத் மூனி, எலிஸ் பெர்ரி, மேகன் ஷுட், அனாபெல் சதர்லேண்ட் , ஜார்ஜியா வேர்ஹாம்

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை வார்ம்-அப் போட்டிகள்:

பிப்ரவரி 6, 2023 (திங்கட்கிழமை)

  • நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் (பிற்பகல் 1:30)
  • இலங்கை  vs அயர்லாந்து  (பிற்பகல் 1:30)
  • தென்னாப்பிரிக்கா vs இங்கிலாந்து (மாலை 6:00 மணி)
  • ஆஸ்திரேலியா vs இந்தியா (மாலை 6:00 மணி)
  • பாகிஸ்தான் vs பங்களாதேஷ் (மாலை 6:00 மணி)

பிப்ரவரி 8, 2023 (புதன்கிழமை)

  • அயர்லாந்து vs ஆஸ்திரேலியா (பிற்பகல் 1:30)
  • இங்கிலாந்து vs நியூசிலாந்து (பிற்பகல் 1:30)
  • பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா (மாலை 6:00 மணி)
  • வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா (மாலை 6:00 மணி)
  • பங்களாதேஷ் vs இந்தியா (மாலை 6:00 மணி)
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget