Women T20 World Cup : ஸ்மிருதி மந்தனாவுக்கு சாதனை சாத்தியமாகுமா? இந்தியா வெற்றிபெற 119 ரன் இலக்கு!
Women T20 World Cup : ஸ்மிருதி மந்தனாவுக்கு சாதனை சாத்தியமாகுமா? இந்தியா வெற்றி பெற 119 ரன் இலக்கு!
மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 117 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடந்து வருகிறது. கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றைய குரூப் சுற்று போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் உடன் விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு இது இரண்டாவது லீக் சுற்று போட்டியாகும்.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஹேலே மேத்யூஸ் மற்றும் ஸ்டாஃபைனே டெய்லர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன் எடுத்திருந்தபோது, பூஜா வஸ்ட்ராக்கர் பவுலிங்கில் மேத்யூஸ் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஷமைனே காம்பெல்லே டெய்லருடன் இணைந்து நிதானமான ஆடினர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 77 ரன்கள் வரை 1 விக்கெட்டை இழந்து நிதானமான ஆடி வந்தது. தீப்தி ஷர்மாவின் சுழல்பந்து வீச்சில் கேம்பேல்லே அவுட் ஆனார். அடுத்தடுத்த ஓவர்களின் வெஸ்ட் இன்டீஸ் அணி விக்கெட்களை இழக்க தொடங்கியது.
தீப்தி ஷர்மாவின் அதிரடி பவுலிங் இந்தியாவிற்கு மூன்று விக்கெட்களைப் பெற்று தந்தது. ஹர்மன்பீர்த் கவுர் தலைமையிலான களமிறங்கி அணி ஃபீல்டிங்கில் சில சறுக்கல்களைச் சந்தித்தாலும் மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ் அணியை ரன் எடுக்க விடுமால் கவனமாக விளையாடியது.
ரேணுகா சிங் ஆரம்ப ஓவ்ர்களில் சிறப்பாக பந்து வீசி வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்களுக்கு சவாலான சூழலை ஏற்படுத்தினார். பவர்ப்ளே நேரத்தில் ராஜேஸ்வரி கெய்க்வாட்-இன் பவுலிங் சூழலுக்கு கை கொடுக்கவில்லை என்பதை புரிந்து கொண்ட ஹம்ரீத்மன் கவுர், ஷஃபாலி வர்மாவை பவுலிங்கிகு தேர்வு செய்தது எதிரணியை அதிக ரன்கள் எடுத்துவிடாமல் கட்டுப்படுத்த உதவியது.
சிறப்பான ஆடிய டெய்லரின் விக்கெட்டை தீப்தி வீழ்த்தியது முக்கியதுவம் வாய்ந்தது. அடுத்தடுத்த வந்தவர்களும் பெரிதாக ஜொலிக்கவில்லை. இந்திய அணியில் சார்பில் பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது. ரேணுகா சிங், பூஜா வஸ்ட்ரகர் இருவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். தீப்தி சர்மா 4 ஓவர்களுக்கு 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை எடுத்தார்.
இதன் மூலம் தீப்தி சர்மா புதிய சாதனையை படைத்துள்ளார். 20 ஓவர் போட்டிகள் 100 விக்கெட்களை எடுத்த பெருமைக்குரிய பெற்றார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக டெய்லர் 42 ரன்கள், கேம்பெல்லே 30 ரன்கள், நேசன் 21 ரன்கள் எடுத்திருந்தனர். நேசனை அவுட் ஆக்கியதும் ஆட்டத்தின் போக்கை மாற்றியது எனலாம்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்துள்ளது.
119 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்க இருக்கிறது.