IND vs WI, WT20: அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ்; வெஸ்ட் இண்டீஸை புரட்டி எடுத்து வென்ற இந்திய அணி!
Women T20 World Cup : வெஸ்ட் இண்டீஸுக்கு அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
![IND vs WI, WT20: அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ்; வெஸ்ட் இண்டீஸை புரட்டி எடுத்து வென்ற இந்திய அணி! Women's T20 World Cup 2023 India Women won by 6 wickets against West Indies Women at Newlands Cricket Ground IND vs WI, WT20: அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ்; வெஸ்ட் இண்டீஸை புரட்டி எடுத்து வென்ற இந்திய அணி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/15/691fead6c2a7eea839889768f744bd8d1676477851679333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றது. குரூப் லீக் சுற்றுப் போட்டிகளில் இந்தியா இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய பவுலர்களின் திறமையான பந்து வீச்சினால் எதிரணியை 118 ரன்களுடன் கட்டுப்படுத்த முடிந்தது. இந்தியா சார்பில் தீப்தி ஷர்மா சிறப்பாக பந்து வீசினார். ரேணுகா சிங், பூஜா வஸ்ட்ரகர் இருவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். தீப்தி சர்மா 4 ஓவர்களுக்கு 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக டெய்லர் 42 ரன்கள், கேம்பெல்லே 30 ரன்கள், நேசன் 21 ரன்கள் எடுத்திருந்தனர். நேசனை அவுட் ஆக்கியதும் ஆட்டத்தின் போக்கை மாற்றியது எனலாம்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவின் வெற்றி பயணம்:
இந்திய அணி 119 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிர்தி மந்தனா மற்றும் ஷாஃபாலி வர்மா களமிறங்கினர். இந்தப் போட்டியில் 47 ரன்கள் எடுத்தால் எடுத்தால், சர்வதேச மகளிர் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த உலகின் ஆறாவது கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையைப் ஸ்மிருதி மந்தனா பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கரிஷ்மா ராம்ஹஹாரக் பந்தில் 10 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
ஷஃபாலி வர்மா 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜெமிமியாவும் மேத்யூஸ் பந்தில் வெளியேறினார்.
கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ரிச்சா கோச் இருவரும் இணைந்து நிதானமாக ஆடினர். ஃபோர் , டபுள்ஸ் என்று இலக்கை எட்டி விளையாட தொடங்கினர்.
14 பந்துகளுக்கு 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றிருந்த நிலையில், ஹர்மன்ப்ரீத் கவுர் சிஸ்சர் அடிக்க முயன்றார். ஆனால், அவுட் ஆனார்.
18 வது ஓவரின் முதல் பந்தில் ரிச்சார் கோஷ் பவுண்டி அடித்து வெற்றியை பெற்று தந்தார். இதன் மூலம் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று குரூப் பி -இல் 4 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அணியில் அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 32 ரன்களுக்கு 44 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)