Deepti Sharma T20 Record: வரலாற்று சாதனையில் இந்தியாவுக்காக முதல் பெயர்.. வட்டமடித்து கெத்துக்காட்டிய தீப்தி சர்மா!
சர்வதேச டி20 போட்டியில் தீப்தி ஷர்மா 100 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் நேருக்குநேர் மோதி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 118 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி சார்பில் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதில் முதல் விக்கெட்டை தீப்தி சர்மா வீழ்த்தியதன் மூலம் புது சரித்திரம் ஒன்றை படைத்தார்.
A big milestone for Indian spinner Deepti Sharma 🌟
— ICC (@ICC) February 15, 2023
She becomes the first India international to reach the landmark in T20Is.
Follow LIVE 📝: https://t.co/kQpGPcjbyu #WIvIND | #T20WorldCup | #TurnItUp pic.twitter.com/Iq52X69G5Q
சர்வதேச டி20யில் 100 விக்கெட்கள்:
சர்வதேச டி20 போட்டியில் தீப்தி ஷர்மா 100 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். தற்போது 89வது போட்டியில் விளையாடும் தீப்தி சர்மா 19.07 சராசரியில் இந்த விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 2016ல் இந்தியாவுக்காக டி20 போட்டியில் அறிமுகமானார். அப்போதிருந்து, தற்போது வரை சிறப்பாக பந்துவீசி அசத்தி வருகிறார். அறிமுகமான தனது முதல் போட்டியிலேயே தீப்தி 4 ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். தீப்தி சர்மா 10 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதே அவரது சிறந்த ஆட்டமாகும்.
Deepti Sharma becomes the leading wicket taker for India in T20I history. pic.twitter.com/gTh4DAGYCs
— Johns. (@CricCrazyJohns) February 15, 2023
பெண்களே முதலிடம் :
சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா. அவருக்கு முன் எந்த ஆண் இந்திய அணி வீரர் இந்த சாதனையை படைக்கவில்லை. பூனம் யாதவ் 98 விக்கெட்களுடன் மகளிர் இந்திய கிரிக்கெட்டில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்திய ஆண்கள் அணியில் யுஸ்வேந்திர சாஹல் 91 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 90 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். 25 வயதான தீப்திக்கு முன், மகளிர் கிரிக்கெட்டில் 8 பந்துவீச்சாளர்கள் 100 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை அனிசா முகமது அதிகபட்சமாக 125 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
மகளிர் கிரிக்கெட் டி20 வடிவத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியல் இங்கே:
- அனிசா முகமது - 125
- நிடா தார் - 121
- எலிஸ் பெர்ரி - 120
- மேகன் ஷட் - 117
- ஷப்னிம் இஸ்மாயில் - 117
- கேத்ரீன் ஸ்கிவர்-ப்ரண்ட் - 112
- சோஃபி டிவைன் - 110
- அன்யா ஷ்ரப்சோல் - 102
- தீப்தி சர்மா - 100
- பூனம் யாதவ் - 98