Babar Azam: இதே நிலை தொடர்ந்தால்... பாபர் அசாமுக்கு வந்த ஆபத்து... கேப்டன் பொறுப்பில் நீடிப்பாரா?
நடப்பு உலகக் கோப்பைக்கு பிறகு பாபர் அசாம் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் தொடங்கியது ஐசிசி உலகக் கோப்பை தொடர்.
2023 ஆம் ஆண்டின் இந்த உலகக் கோப்பை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இந்த தொடரில் இது வரை தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் சில அணிகள் இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதில் , பாகிஸ்தான் அணியும் ஒன்றாக கருதப்படுகிறது.
முன்னதாக, அந்த அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றியும் 3 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. இதில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (அக்டோபர் 23) நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியும் ஒன்று.
அதன்படி, கடந்த 1999 ஆம் ஆண்டிற்கு பிறகு பாகிஸ்தான் அணியை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தி சாதனை படைத்தது. இதனிடையே, தொடர் தோல்விகளால் துவண்டு போய் உள்ள அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமை நோக்கி விமர்சனங்கள் அள்ளி வீசப்படுகிறது.
மேலும், அவர் இந்த உலகக் கோப்பை தொடருக்கு பிறகு பாகிஸ்தான் அணியிம் கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பலவீனமாக காணப்படும் பாகிஸ்தான அணி:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி திறமையான வீரர்களை கொண்டிருந்தாலும் அவர்கள் பாபர் அசாமின் தலைமையின் கீழ் வளரவில்லை என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
முன்னதாக, பாகிஸ்தான் அணியின் கேப்டனாக் பாபர் அசாம் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம்10 ஆம் தேதி நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணியிடம் 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. அதேபோல், இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் 2 விக்கெட் வித்தியசத்தில் தோல்வியை தழுவியது பாகிஸ்தான்.
அதேபோல், கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. அந்த மூன்று போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தாலும் அந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணி பீல்டிங்கில் சொதப்பியதும் விமர்சனங்களுக்கு உள்ளானது.
பேட்டிங்கில் சொதப்பும் பாபர் அசாம்:
கேப்டன் பொறுப்பில் இருப்பதால் அந்த அழுத்தத்தின் காரணமாக அவரது பேட்டிங் சிறப்பானதாக இல்லை என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக, கடந்த 2022 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற டி20 ஆசியக் கோப்பையின்போது அவரது பேட்டிங் சொதப்பலாகவே இருந்தது. அதேபோல், இந்த உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில், 5 ரன்களும், இலங்கைக்கு எதிரான போட்டியில் 10 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற்ற ஆறு போட்டிகளில் மொத்தம் 68 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஏழு போட்டிகளில் 17.71 என்ற சராசரியில் 124 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
சிறந்த கேப்டனாக இருப்பதற்கான திறமைகள் இருக்கிறதா?
பாகிஸ்தான் அணியில் உட்பூசல்கள் இருப்பதாக கருத்தப்படுகிறது. அதேபோல், அணிக்குள்ளே இரண்டு தலைமையில் வீரர்கள் செயல்படுவதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
மேலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கூட பாபர் அசாம் பந்து வீச்சில் சரியனா மாற்றங்களை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டையும் பாகிஸ்தான் ரசிகர்கள் வைக்கின்றனர். இதனால், சிறந்த கேப்டனாக இருப்பதற்கான திறமை பாபர் அசாமிக்கு இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இதே நிலை வரும் போட்டிகளிலும் ஏற்பட்டால் இந்த உலகக் கோப்பை தொடருக்கு பிறகு, அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவே கருதப்படுகிறது.
மேலும் படிக்க: Angelo Mathews: இலங்கை அணியின் தொடர் தோல்வி... பத்திரனாவுக்குப் பதிலாக களமிறங்கும் மேத்யூஸ்!
மேலும் படிக்க: Asian Para Games 2023 LIVE: ஆசிய பாரா விளையாட்டு போட்டி- 2வது நாளில் பதக்கங்களை குவிக்கும் இந்தியர்கள்