Asian Para Games 2023 LIVE: ஆசிய பாரா விளையாட்டு... பதக்கங்களை குவிக்கும் இந்தியா..!
Asian Para Games 2023 LIVE: : சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டு தொடர்பான லைவ் அப்டேட்டை, உடனுக்குடன் தெரிந்துகொள்ள எபிபி நாடு தளத்துடன் இணைந்திருங்கள்
LIVE
Background
Asian Para Games 2023 LIVE: சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டில், இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
பாரா ஆசிய விளையாட்டுகள்:
ஆசிய விளையாட்டை தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கான, ஆசிய பாரா விளையாட்டுகள் சீனாவில் தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. ஹாங்சோவ் நகரில் வரும் 28ம் தேதி வரை இந்த விளையாட்டு நடைபெற உள்ளது. நான்காவது முறையாக நடைபெறும் இதில், 22 விளையாட்டுகளில் 24 பிரிவுகளில் 566 தங்கப் பதக்க நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதற்காக இந்தியா சார்பில் 196 ஆண்கள் மற்றும் 113 பெண்கள் என 309 தடகள வீரர், விராங்கனைகள் சீனா சென்றுள்ளனர். இவர்கள் 17 பிரிவுகளில் களமிறங்க உள்ளனர். கேனோயிங், பிளைண்ட் கால்பந்து, புல்வெளி கிண்ணங்கள், ரோயிங் மற்றும் டேக்வாண்டோ ஆகியவை முதன்முறையாக நடப்பாண்டில் ஆசிய பாரா விளையாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தங்கம் வென்ற இந்தியர்கள்:
F51 கிளப் எறிதல் போட்டியில் இந்திய வீரர் பிரணவ் சூர்மா தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஆசிய பாரா விளையாட்டில் F51 கிளப் எறிதல் போட்டியில் 3 பதக்கங்களையும் கைப்பற்றியது இந்தியா.
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 மற்றும் ஆடவர் கிளப் த்ரோ எஃப் 51 ஆகிய இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தி, ஒவ்வொரு பிரிவிலும் மூன்று பதக்கங்களை வென்றது.
Shailesh Kumar wins the first🥇GOLD for India while Mariyappan Thangavelu takes the SILVER 🥈 in men's high jump T63. #ParaAthletics #AsianParaGames #Hangzhou2022APG @19thAGofficial l @IndianOilcl l @SBI_FOUNDATION l @Media_SAI l @IndiaSports pic.twitter.com/PjL4bu0QcT
— Paralympic India 🇮🇳 (@ParalympicIndia) October 23, 2023
சைலேஷ் குமார் மற்றும் பிரணவ் சூர்மா ஆண்கள் உயரம் தாண்டுதல் டி63 மற்றும் ஆண்கள் கிளப் எப் 51 ல் முறையே தங்கம் வென்றனர். சைலேஷ் குமார் 1.82 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கதையும், மாரியப்பன் தங்கவேலு 1.80 மீட்டர் தாண்டி வெள்ளியையும், கோவிந்த்பாய் ராம்சிங்பாய் பதியார் 1.78 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். இதில், சுவாரஸ்யமாக, ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி63 போட்டியில் இந்த மூன்று இந்திய விளையாட்டு வீரர்கள் மட்டுமே போட்டியாளர்களாக இருந்தனர்.
ஆடவர் கிளப் எஃப் 51 போட்டியில் பிரணவ் சூர்மா 30.01 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். இவரை தொடர்ந்து தரம்பிட் 28. 76 மீட்டரும், அமித் குமார் 26.93 மீட்டரும் எறிந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்தனர். இந்த போட்டியில் நான்கு விளையாட்டு வீரர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். சவுதி அரேபியாவின் ராதி அலி அல்ஹர்தி 23.77 மீட்டர் தூரம் எறிந்து கடைசி இடத்தை பிடித்தார்.
More medals coming in from #ParaAthletics in #AsianParaGames #Hangzhou2022 @19thAGofficial @IndianOilcl @SBI_FOUNDATION @IndiaSports pic.twitter.com/WnEwfwf1kn
— Paralympic India 🇮🇳 (@ParalympicIndia) October 23, 2023
தொடர்ந்து, மோனு கங்காஸ் ஆடவருக்கான ஹாட் எட் எஃப் 11 போட்டியில் 12.33 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்கப் பட்டியலில் இடம் பிடித்தார்.
பெண்களுக்கான கேனோ விஎல்2 போட்டியில் பிராச்சி யாதவ் 1;03.147 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள்: வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு பாராட்டு
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளின் உயரம் தாண்டும் ஆட்டத்தில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக அவருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், இனிவரும் ஆட்டங்களில் மேலும் சாதிக்கவும் வாழ்த்துகிறேன்.
இதே உயரம் தாண்டும் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய வீரர் சைலேஷ் குமார், வெண்கலம் வென்ற இந்திய வீரர் இராம்சிங் ஆகியோருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Asian Para Games 2023 LIVE: பேட்மிண்டனில் மற்றொரு வெண்கலம்..!
பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் SL3 போட்டியில் மந்தீப்கௌர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
Asian Para Games 2023 LIVE: வில்வித்தையில் வெள்ளி வென்ற இந்தியா..!
ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் வில்வித்தையில் ராகேஷ் குமார் மற்றும் சூரஜ் சிங் ஆகியோர் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளி வென்றனர்.
Asian Para Games 2023 LIVE: குண்டு எறிதலில் இரண்டு பதக்கம்..!
ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில், F-56/, 57 பிரிவில், இந்திய வீரர் சோமன் ராணா 16 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார். அதேபோல், 14.42 மீட்டர் தூரம் எறிந்து ஹோடோஷே தேனா ஹொகாடோ வெண்கலம் வென்றார்.
Asian Para Games 2023 LIVE: நீளம் தாண்டுதல்... தங்கம் வென்ற இந்தியா..!
பெண்களுக்கான நீளம் தாண்டுதல் T47 இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை நிமிஷா தங்கம் வென்றார்.
அதன்படி,5.15 மீட்டர் நீளம் தாண்டி அசத்தியுள்ளார்.
Asian Para Games 2023 LIVE: தடகளத்தில் தங்கம் வென்ற இந்தியா..!
பெண்களுக்கான 1500m-T11 தடகளப் போட்டியில் ரக்ஷிதா ராஜு 5:21.45 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து தங்க பதக்கத்தை வென்றார். அதேபோல், மற்றொரு இந்திய வீரரான லலிதா கில்லாகா 5:48 நிமிடங்களில் பந்த தூரத்தை கடந்து வெள்ளி பதக்கம் வென்றார்.