(Source: ECI/ABP News/ABP Majha)
உங்க ஆல் டைம் ஃபேவரைட் டி20 பிளேயர் யார்? விராட் கோலி பெயரை சொல்லாத ஏபிடி… வருத்தத்தில் ரசிகர்கள்!
விராட் கோலி ரஷீத் கானை விட பெரிய சாதனைகளை புரிந்திருந்தாலும் வெற்றி பெறுதல் குறித்து டி வில்லியர்ஸ் பேசியதால் கோலி ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரலாற்றில் இன்றுவரை அனைத்து சீசன்களிலும் ஒரே ஒரு அணிக்காக மட்டுமே விளையாடிய ஒரே கிரிக்கெட் வீரர் விராட் கோலி, இவர் தற்போதும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். பெங்களூரை தளமாகக் கொண்ட இந்த அணியில் ஆடும்போது, விராட் கோலி மற்றும் தென்னாப்பிரிக்க பேட்டிங் ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸுடன் சிறந்த நட்பை கொண்டிருந்தார்.
விராட் - ஏபிடி
இருவரும் ஒன்றாக இணைந்து அணிக்காக நல்ல பங்களிப்பை வழங்கியது மட்டுமல்லாமல், ஒன்றாக பேட்டிங் செய்யும் போது பல சாதனைகளையும் படைத்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, RCB இன்னும் ஐபிஎல் இறுதி கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்ற நிலையில், விராட் கோலிக்கு இன்னும் ஐபிஎல் கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளது. விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லர்ஸ் இருவரும் எல்லா காலத்திலும் சிறந்த டி20 பேட்டர்களில் ஒருவராக கருதப்படுகிறார்கள்.
அதிர்ச்சி பதில் தந்த ஏபிடி
இந்நிலையில் சமீபத்தில், டி வில்லியர்ஸிடம் 'எல்லா காலத்திலும் சிறந்த டி20 கிரிக்கெட் வீரரை' தேர்வு செய்யும்படி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த டிவிலியர்ஸின் கருத்து அனைவரையும் திகைக்க வைத்தது. அவர் தனது 'அன்புள்ள நண்பர்' விராட் கோலியை தேர்வு செய்யவில்லை, அதற்கு பதிலாக, டி வில்லியர்ஸ் ஆப்கானிஸ்தானின் 24 வயதாகும் ரஷித் கானை 'எல்லா காலத்திலும் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர்' என்று கூறினார். விராட் கோலி ரஷீத் கானை விட பெரிய சாதனைகளை புரிந்திருந்தாலும் வெற்றி பெறுதல் குறித்து டி வில்லியர்ஸ் பேசியதால் கோலி ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
View this post on Instagram
வெற்றியை தேடுகிறார் ரஷீத்
"எல்லா காலத்திலும் என்னுடைய சிறந்த T20 வீரர் வேறு யாருமில்லை, ரஷித் கான்தான். அவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கலக்குகிறார். இரண்டு துறைகளிலும் மேட்ச் வின்னராக திகழ்கிறார். அவர் எப்போதும் வெற்றியை தேட விரும்புகிறார்; அவர் மிகவும் போராடும் குணம் வாய்ந்தவர், மேலும் அவர் சிறந்த T20 வீரர்களில் ஒருவராக இருக்கிறார்", என்று கூறிவிட்டு, மீண்டும் சுதாரித்து, "இல்லை, சிறந்தவர்களில் ஒருவர் இல்லை, சிறந்தவர்", என்று அவர் SuperSport இல் அழுத்தி கூறினார். ஆப்கானிஸ்தானின் 24 வயதான ரஷித் கான், 77 டி20 போட்டிகளில் 126 விக்கெட்டுகளை வீழ்த்தி, டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரராக உள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி (115 டி20 சர்வதேச போட்டிகளில் 4008 ரன்கள்) டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்தவர் என்ற பெருமையை கொண்டுள்ளார். நட்சத்திர வீரர் தனது T20I வாழ்க்கையில் இதுவரை ஒரு சதம் மற்றும் 37 அரைசதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.