”இவர் பிரியாணி சாப்பிட போலாம்! இந்தியா விளையாட போகக்கூடாதா?” - சீண்டிய தேஜஸ்வி! அப்செட்டில் பிரதமர்!
விளையாட்டில் அரசியலை கொண்டு வருவது நல்லதல்ல என பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
விளையாட்டில் அரசியலை கொண்டு வருவது நல்லதல்ல என பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரான தேஜஸ்வி யாதவ், இதுபற்றி கூறுகையில், “விளையாட்டில் அரசியலை கொண்டு வருவது நல்லதல்ல. ஒலிம்பிக்கில் அனைவரும் பங்கேற்பது இல்லையா? ஏன் இந்தியா பாகிஸ்தான் செல்லக்கூடாது? கண்டிப்பாக செல்ல வேண்டும். மற்ற அணிகளும் இந்தியாவுக்கு வர வேண்டும். வீரர்கள் விளையாடுவதற்கு அண்டை நாட்டிற்குச் செல்வதில் ஏன் ஆட்சேபனை? பிரதமர் நரேந்திர மோடி பிரியாணி சாப்பிட பாகிஸ்தானுக்குச் செல்லலாம் என்றால், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஒரு முக்கியமான போட்டிக்காக பாகிஸ்தானுக்குச் செல்வது நல்லதுதானே? இது ஏன் நல்லதல்ல?" என்றார்.
2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் வரும் 19ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பாகிஸ்தானில் அந்த தொடர் நடந்தால் விளையாடமாட்டோம் என இந்தியாவின் பிசிசிஐ ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
மேலும் தாங்கள் விளையாடும் போட்டிகளை வெளிநாட்டில் நடத்தவும் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அதை பாகிஸ்தான் ஏற்கவில்லை.
இந்த சூழலில்தான் பிசிசிஐ மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஐசிசி நிர்வாகிகள் சேர்ந்து இன்று ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நக்வி, “எங்கள் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறோம். பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எது சிறந்ததோ அதையே நான் செய்வேன்.
அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். இந்தியா பாகிஸ்தான் வரவில்லை என்றால் நாங்களும் இந்தியா வரமாட்டோம். விளையாடமாட்டோம். இந்திய அணி எழுத்துப்பூர்வமாக எங்களிடம் அறிவிக்க வேண்டும். ஆனால் இதுவரை எதுவும் செய்யவில்லை” எனத் தெரிவித்தார்.
2025 மகளிர் கோப்பை, 2026 டி20 உலகக்கோப்பை என அடுத்தடுத்து இந்தியாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.