மேலும் அறிய

அடுத்தடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹோல்டர்..! இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற மேற்கிந்திய தீவுகள்..!

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஜேசன் ஹோல்டர் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, டி20 கிரிக்கெட்டில் மே.இ. தீவுகள் அணிக்காக முதலில் ஹாட்ரிக் வீழ்த்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வருகிறது. இந்த நிலையில், பார்படோசில் இரு அணிகளுக்கும் இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.  இந்த போட்டியில் ஜேசன் ஹோல்டர் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றி பெற வைத்ததுடன், புதிய சாதனையையும் படைத்துள்ளார்.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பிரண்டன் கிங்கும், மேயர்சும் அதிரடி தொடக்கத்தை அளித்தனர். குறிப்பாக, மேயர்ஸ் 19 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 31 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹோல்டர்..! இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற மேற்கிந்திய தீவுகள்..!

அடுத்து வந்த ரொமாரியோ ஷெபர்ட் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடி வீரர் நிகோலஸ் பூரண் மிகவும் பொறுமையாக ஆடி 24 பந்தில் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். கடைசியில் ஜோடி சேர்ந்த கேப்டன் பொல்லார்டும், ரோவ்மன் பாவெலும் அதிரடி காட்டினர். பொல்லார்ட் 25 பந்தில் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 41 ரன்களும், பாவெல் 17 பந்தில் 1 பவுண்டரி 4 சிக்ஸருடன் 35 ரன்களும் எடுக்க மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை எடுத்தது. கிறிஸ் ஜோர்டன் 4 ஓவர்களில் 52 ரன்களை வாரி வழங்கினார்.

இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஜேசன் ராய் 8 ரன்களிலும், டாம் பான்டன் 16 ரன்களிலும் கேட்ச் கொடுத்து வெளியேறினர். அடுத்து வந்த ஜேம்ஸ் வின்ஸ் மட்டும் அதிரடியாக ஆடினார். ஆனால், கடந்த போட்டியில் அசத்திய இங்கிலாந்து கேப்டன் மொயின் அலி  14 ரன்கள் எடுத்த நிலையில் ஜேசன் ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹோல்டர்..! இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற மேற்கிந்திய தீவுகள்..!

அடுத்து வந்த லிவிங்ஸ்டனும் ஆட்டமிழக்க, ஜேம்ஸ் வின்சும், விக்கெட் கீப்பர் சாம்பில்லிங்சும் அதிரடியாக ஆடினர். அணியின் ஸ்கோர் 112-ஆக உயர்ந்தபோது 35 பந்தில் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 55 ரன்கள் எடுத்திருந்த ஜேம்ஸ் வின்ஸ் ஆட்டமிழந்தார். ஆனாலும், சாம் பில்லிங்சின் அதிரடியால் அணியின் ஸ்கோர் உயரத் தொடங்கியது.

இந்த நிலையில், கடைசி ஓவரில் 6 பந்துகளில் 18 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் சாம்பில்லிங்ஸ் இருந்ததாலும், கைவசம் 4 விக்கெட்டுகள் இருந்ததாலும் இங்கிலாந்து வீரர்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஜேசன் ஹோல்டர் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது பந்தில் கிறிஸ் ஜோர்டன் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த அடுத்த பந்திலே சாம்பில்லிங்ஸ் ஹெய்டன் வால்ஷிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.  அவர் 28 பந்தில் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 41 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்தில் அடில் ரஷீத்தை டக் அவுட்டாக்கினார். இங்கிலாந்தின் கடைசி விக்கெட்டான சகீப் மகமுதையும் அடுத்த பந்தில் போல்டாக்கி மேற்கிந்திய தீவுகள் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். இதனால், இந்த தொடரை 3-2 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி வென்று அசத்தியுள்ளது. 

அடுத்தடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹோல்டர்..! இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற மேற்கிந்திய தீவுகள்..!

இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக டி20 கிரிக்கெட் போட்டிகளில் முதன்முறையாக ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ஜேசன் ஹோல்டர் படைத்தார். இந்த போட்டியின் நாயகனாகவும், இந்த தொடரின் நாயகனாகவும் ஜேசன் ஹோல்டர் தேர்வு செய்யப்பட்டார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget