Watch video: ஜிம்பாப்வேயிடம் தோல்வி… மண்டியிட்டு அழுத பாகிஸ்தான் வீரர்! வைரலாகும் வீடியோ…
ஜிம்பாப்வே வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வெற்றியை வித்தியாச வித்தியாசமாக கொண்டாடி வரும் நிலையில் பாகிஸ்தான் வீரர் ஷாதாப் அழுத வீடியோ வைரலாகி உள்ளது.
நடைபெற்றுக்கொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் ஜிம்பாப்வேயிடம் தோல்வியடைந்ததை அடுத்து பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷதாப் கான் மைதானத்தின் ஓரத்தில் அமர்ந்து அழும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அழுத ஷதாப்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்று ஆட்டம் ஒன்றில் வலுவான பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஜிம்பாப்வே அணியின் இந்த திரில் வெற்றி, பாகிஸ்தானின் தகுதிபெறும் வாய்ப்பை ஆபத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், ஜிம்பாப்வே வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வித்தியாச வித்தியாசமாக கொண்டாடி வரும் நிலையில் பாகிஸ்தான் வீரர் ஷாதாப் அழுத விடியோ வைரலாகி உள்ளது.
பாகிஸ்தான் தோல்வி
பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி தொடக்கத்தில் இருந்தே அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆடியும் பாகிஸ்தான் வேகத்தில் சரிந்து 130 ரன்கள்தான் குவித்தது. குறைந்த டார்கெட் என்ற அலச்சியதோடு களம் இறங்கிய பாகிஸ்தானின் பாபர் அசாம் 4 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அவரை தொடர்ந்து 14 ரன்களில் முகமது ரிஸ்வானும் அவுட் ஆக, பாகிஸ்தான் அணியில் ஷான் மசூத் மட்டுமே நிதானமாக ஆடி 44 ரன்கள் வரை எடுத்தார். மற்ற வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக நடையை கட்டிய போக்கில் இருந்ததால் யாரும் பெரிதாக ரன் குவிக்கவில்லை. இதனால் பாகிஸ்தான் அணி 1 ரன் வித்தியாசத்தில் கடைசி பந்தில் ஆட்டத்தை இழந்தது. ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராஸா நன்றாக பந்து வீசி முக்கியமான தருவாயில் 3 விக்கெட்களை எடுத்தார்.
வைரலான வீடியோ
இந்த தோல்விக்குப் பிறகு ஆல்-ரவுண்டர் ஷதாப் கான் மண்டியிட்டு அழுவதைக் காணக்கூடிய புதிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. பெர்த்தில் உள்ள மைதானத்திற்கும் டிரஸ்ஸிங் அறைக்கும் இடையே உள்ள பாதையில் ஷாதாப் அழுவதை, ரசிகர்களுள் யாரோ ஒருவர் படம் பிடித்ததாக தெரிகிறது. சில ரசிகர்கள் ஷாதாப் கானுக்கு பரிதாபம் காட்டினாலும் மற்றவர்கள் அவரை விமர்சித்தனர். பாகிஸ்தான் போட்டியில் தோல்வியடைந்ததை மிகைப்படுத்துகிறார் என்று சிலர் கூறினார்.
Cricket can be so cruel sometimes.🫣😨 pic.twitter.com/dY5VXrlddM
— Avinash Aryan (@AvinashArya09) October 28, 2022
பாகிஸ்தானுக்கு இனிமேலும் வாய்ப்புண்டா?
பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில் தோற்றிருந்தாலும், இரண்டுமே கடைசி ஓரிரு பந்துகளில் அமைந்தது அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பை இன்னும் பிடித்து வைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நெதர்லாந்தில் தொடங்கி, நவம்பர் 3, வியாழன் அன்று தென்னாப்பிரிக்கா மற்றும் இறுதியாக நவம்பர் 6, ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷுக்கு எதிராக மோதவுள்ள எஞ்சிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெறுவதே பாகிஸ்தான் அணியின் முதல் பணியாகும். அதற்கு மேல் பாகிஸ்தானின் கைகளில் இல்லை. ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் மீதமுள்ள மூன்று போட்டிகளில் இரண்டில் தோற்றால், அவர்கள் ஐந்து புள்ளிகளுடன் பாகிஸ்தானுக்கு பின்னால் தள்ளப்படுவார்கள். வங்கதேசம் போட்டிக்கு வர வாய்ப்புண்டு அந்த அணியும் ஒரு போட்டியில் தோற்றால், பாகிஸ்தான் எளிதில் உள்ளே செல்லும், ஏனெனில் வங்கதேசம் ரன் ரேட்டில் மிகவும் மோசமான நிலையில் இருப்பது பாகிஸ்தான் அணிக்கு மேலும் பலம். இதற்கெல்லாம் இடையில் மழை ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.