(Source: ECI/ABP News/ABP Majha)
Watch Video: ஸ்கெட்ச் போட்டு கவாஜாவை காலி செய்த ஸ்டோக்ஸ்.. ஆஷசில் அசத்தல்..! வைரலாகும் வீடியோ..!
ஆஷஸ் முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி தந்த கவாஜாவை இங்கிலாந்து அணி வியூகம் வகுத்து அவுட்டாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பர்மிங்காமில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக ஆடிய உஸ்மான் கவாஜா சதம் அடித்தார். மற்ற வீரர்களை அவுட்டாக்கினாலும் உஸ்மான் கவாஜாவை ஆட்டமிழக்க வைக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் திணறினர்.
ஸ்டோக்சின் வியூகம்:
அப்போது, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் புதிய யுக்தியை கையாண்டார். அதாவது, ஆட்டத்தின் 113வது ஓவரை ராபின்சன் வீசினார். அப்போது, கவாஜா பேட் செய்து கொண்டிருந்தார். கவாஜாவிற்கு பாய்ண்ட்ஸ் கவர் திசையில் ஜோ ரூட், ஸ்டூவர்ட் பிராட், பென் ஸ்டோக்சும் கவாஜாவின் இடது புற பாய்ண்ட் திசையில் இன்னும் 3 வீரர்களையும் நிறுத்தினார்.
The dismissal of Usman Khawaja.
— Johns. (@CricCrazyJohns) June 18, 2023
A great tactical move to get the well settled Khawaja. pic.twitter.com/y5EJ14qYGj
அதாவது அம்பர்லா ஃபீல்ட் செட்டப் ( குடையை போன்ற பீல்டிங்) அமைப்பை ஏற்படுத்தி கவாஜாவிற்கு நெருக்கடி அளித்தனர். இந்த பீல்ட் செட் அப் செய்யும்போது வீரர்கள் பந்தை தட்டிவிட நினைத்தால் வீரர்கள் பந்தை தடுத்துவிடுவார்கள். இதனால், அவுட்பீல்டில் பெரியளவில் எந்த பீல்டரும் இல்லாததால் பேட்ஸ்மேன்களுக்கு பந்தை அடிக்கும் ஆசை ஏற்படும்.
சிக்கிய கவாஜா:
அவ்வாறு கவாஜாவின் பேட்டிங் ஆசையை தூண்டி அவரை ராபின்சன் வீசிய பந்தை அடிக்க இறங்கி வந்தால் அவரை ஆட்டமிழக்கச் செய்யலாம் என்று பீல்டிங் அமைப்பை ஸ்டோக்ஸ் வியூகம் வகுத்தார். அவர் வகுத்த வியூகம்போலவே கவாஜா ராபின்சன் வீசிய 4வது பந்தில் இறங்கி வந்தார். ஆனால், பந்து பேட்டில் படாமல் நேராக சென்று ஸ்டம்பை பதம் பார்த்தது.
இதனால், இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி தந்த கவாஜா 141 ரன்களில் போல்டாகி வெளியேறினார். அம்பர்லா ஃபீல்டிங் செட்டப் வியூகம் மூலம் கவாஜாவை காலி செய்த ஸ்டோக்சிற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுகளை கூறி வருகின்றனர். தற்போது இந்த வீடியா இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது நடைபெற்று வரும் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 393 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கவாஜாவின் அபார சதத்தால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 386 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது. இந்த நிலையில், 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஜாக் கிராவ்லி - டக்கெட் விக்கெட்டை பறிகொடுத்தது. 35 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை ஆடி வருகிறது. 4ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறவே தற்போது வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.
மேலும் படிக்க: Ashes 1st Test: விறுவிறுப்பான கட்டத்தில் ஆஷஸ்.. ஆஸ்திரேலியாவிற்கு வலுவான இலக்கை நிர்ணயிக்குமா இங்கிலாந்து?
மேலும் படிக்க: World Cup 2023: சென்னையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரா விளையாட மாட்டோம்.. வேற இடத்தை மாத்துங்க..! பாகிஸ்தான் கோரிக்கை!