Watch Video : அய்யோ போச்சே! பட கூடாத இடத்தில் பட்ட பந்து! அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
Watch Video : மேற்கு இந்திய தீவுகள் மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் எவின் லீவிஸ்க்கு பட கூடாத இடத்தில் பந்து பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
கிரிக்கெட் போட்டிகளின் நடுவே சிறு சிறு சுவரஸ்யமான நிகழ்வுகள் நடைப்பெறும், அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான் மேற்க்கிந்திய தீவுகள் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் நடந்தது.
இதையும் படிங்க: World Chess Championship : ”குகேஷிடம் வேண்டுமென்றே தோற்றார்” விசாரணை வேண்டும்! சர்ச்சையை கிளப்பும் ரஷ்யா..
ஒரு நாள் தொடர்:
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது போட்டி பாஸ்டேர்ரியில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விண்டீல் அணியின் தொடக்க ஆட்டக்காரராக எவின் லீவிஸ் ஆடிக்கொண்டிருந்தார். இந்த போட்டியின் 20-தாவது ஓவரை வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் நஹித் ராணா வீசினார். அப்போது அந்த ஓவரின் இரண்டாவது பந்தை ஷார்ட் பிச்சாக வீசனார், பந்து மேலே எழும் என்று எதிர்பார்த்த போது திடீரேன பந்து கீழ் நோக்கி சென்று லிவீஸ்சின் பிறப்புறுப்பில் பட்டது. பந்து பட்டவுடன் லீவிஸ் கீழே சுருண்டு விழுந்தார், உடனடியாக ஃபிசியோ ஓடி வந்து அவருக்கு சிகிச்சை அளித்தார்.
A 𝑏𝑎𝑙𝑙𝑠y comeback from Evin Lewis 👀💪#WIvBANonFanCode pic.twitter.com/0b61vZOVUd
— FanCode (@FanCode) December 11, 2024
சிரித்த ரோஸ்டன் சேஸ்:
வலியால் எவின் லிவீஸ் துடித்துக்கொண்டு இருக்க, சக வீரரான ரோஸ்டன் சேஸ் சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியாமல் சிரித்து கொண்டு இருந்ததை கேமராமேன் படம் பிடித்தார். அதன் பின்னர் லீவிஸ் எழுந்து மீண்டும் பேட்டிங் ஆட வந்தார்.
மறக்காம படிங்க: Sanjeev Goenka : ”ஒரு வார்த்தை கூட பேசல! இனியும் பேச மாட்டாரு” தோனி குறித்து மனம் திறந்த கோயங்கா..
பறந்த சிக்சர்:
அதன் பிறகு இரண்டு பந்துகள் கழித்து அதே போன்ற ஷார்ட் பிச் பந்தை நஹித் வீச எவின் லிவீஸ் அதனை பெரிய சிக்சராக அடித்து நொறுக்கினார். பட கூடாத இடத்தில் அடிப்பட்டாலும், அந்த இன்னிங்ஸ்சில் 4 சிக்சர் மற்றும் இரண்டு பவுண்டரிகள் அடித்து 49 ரன்கள் எடுத்து விண்டீஸ் அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.