Virat Kohli in last 6 ODI: கடந்த 6 போட்டியிலும் ஆடல... மீண்டும் விமர்சனத்துக்கு உள்ளாகும் விராட்.. இப்படி ஒரு மோசமான ரெக்கார்டா?
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் அதிரடி நாயகன் விராட் கோலி, 5 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் அதிரடி நாயகன் விராட் கோலி, 5 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
2வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்துள்ளது.
இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே தடுமாறி வருகிறது. இந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக முன்னாள் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார்.
எனினும், அவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் வழக்கம்போல் சொதப்பினார். இன்றைய ஆட்டத்தில் வெறும் 5 ரன்களில் நடையைக் கட்டினார். இதே தொடரில் முதல் ஒரு நாள் ஆட்டத்தில் கோலியின் ஸ்கோர் வெறும் 9 மட்டுமே. அதற்கு நடந்த ஒரு நாள் ஆட்டங்களில் 17, 16, 0, 18, 8 ஆகிய ரன்களில் ஆட்டமிழந்தார் கோலி.
Virat kohli in last 6 odi matches
— Sai Krishna💫 (@SaiKingKholi) December 4, 2022
9
17
16
0
18
8
And he has 2 ducks in last 8 ODIs,
massively overrated . Should be kicked out ASAP.
உலகக் கோப்பை டி20 தொடரில் அசத்திய கோலி, ஒரு நாள் கிரிக்கெட்டில் சமீப காலமாக சொதப்பி வருகிறார்.
அவர் மீண்டும் பழைய ஃபார்முக்கு வர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமும் கூட. இந்தியா வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது.
டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில், முதலில் களம் இறங்கிய வங்கதேச அணி பேட்டிங்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய பந்துவீச்சாளர்களில் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. தொடக்க வீரர்களான அனாமுல் ஹக் மற்றும் லிட்டன் தாஸ் வந்த வேகத்தில் வெளியேற, அடுத்து வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ 35 பந்துகளில் 21 ரன்கள் அடித்து வெளியேறினார்.
வங்கதேச அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஷகில் அல் ஹாசன் 20 பந்துகளில் 8 ரன்களை எடுத்திருந்தபோது, வாஷிங்டன் சுந்தர் வீசிய 17 வது ஓவரை எதிர்கொண்டார். அப்போது அடிக்க முயற்சித்த ஷகிக் அல் ஹாசன் பந்தை மேலே உயர்த்தி ஷிகர் தவானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
தொடர்ந்து, கடந்த சில போட்டிகளாக சொதப்பிவரும் முஷ்பிகுர் ரஹீம் 24 பந்துகளில் 12 ரன்கள் எடுத்துபோது மீண்டும் வாஷிங்டன் சுந்தர்- தவான் ஜோடி பிரிக்க, அடுத்து வந்த அஃபிஃப் ஹொசைனும் தான் சந்தித்த முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன்பிறகு, மஹ்முதுல்லாஹ் உடன் ஜோடி சேர்ந்த அஃபிஃப் ஹொசைன் இந்திய அணியின் பந்துவீச்சை பதம் பார்க்க தொடங்கினர்.
60 ரன்களுக்கே 6 விக்கெட்களை தடுமாறியபோது ஜோடி சேர்ந்த இந்த ஜோடி தலா அரைசதங்கள் கடந்து பார்ட்னர்ஷிப்பாக 148 ரன்கள் குவித்தது. 96 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்த மஹ்முதுல்லாஹ், உம்ரான் மாலிக் வீசிய 47 வது ஓவரில் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
அடுத்து உள்ளே வந்த நாசூம் அகமது தன் பங்கிற்கு ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடித்து 18 ரன்கள் குவிக்க, மறுமுனையில் நங்கூரம் போல் நின்ற மெஹிதி ஹசன் 83 பந்துகளில் 100 ரன்கள் அடித்து அசத்தி கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 50 ஓவர் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு 272 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.