மேலும் அறிய

IND vs BAN 2nd ODI : மைதானத்தை விட்டு திடீரென வெளியேறிய கேப்டன் ரோகித்; அணியை வழிநடத்தும் ராகுல்; காரணம் இதுதான்..!

IND vs BAN 2nd ODI : 2வது ஒருநாள் போட்டியின் போது மைதானத்தினை விட்டு வெளியேறியுள்ளார்.

IND vs BAN 2nd ODI : 2வது ஒருநாள் போட்டியின் போது மைதானத்தினை விட்டு வெளியேறியுள்ளார். 

இந்தியா வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன் படி, களம் இறங்கிய வங்கதேச அணி பேட்டிங்கை தொடங்கியது. போட்டியின் 2வது ஓவரை வீசிய முகமது சிராஜின் பந்தை எதிர் கொண்ட அனுமல் அடித்த பந்து, செகண்ட் ஸ்லிப்பில் நின்று கொண்டு இருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவிடம் சென்றது. பந்தை பிடிக்க முயன்ற ரோகித்துக்கு காயம் ஏற்படவே, மைதானத்தில் இருந்து வெளியேறினார். காயத்தின் தன்மை அதிகமாக இருக்கவே அவர் தற்போது மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இவருக்கு பதிலாக மாற்று வீரராக ராஜத் படிதார் களமிறங்கியுள்ளார். 

தற்போது அணியை துணைக் கேப்டன் கே.எல். ராகுல் வழிநடத்தி வருகிறார். தற்போது வங்கதேச அணி 17 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்திய அணி வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்து வங்க தேச அணியிடம் பரிதாபமாகத் தோல்வியுற்றது. 

தொடரை தக்க வைக்குமா இந்தியா?

மேலும், முதல் ஒருநாள் போட்டியில் ஸ்லோ ஓவர் ரேட்டை உபயோகித்ததாக இந்திய அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 80 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் இந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டு முன்மொழியப்பட்ட அனுமதியை ஏற்றுக்கொண்டார். எனவே முறையான விசாரணை தேவையில்லை என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

முதல் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வங்க தேச அணி தொடரைக் கைப்பற்றும் உறுதியுடன் இன்று களமிறங்கும் நிலையில், அதேபோல், இன்றைய போட்டியில் வென்று இந்தியா தொடரைத் தக்க வைக்குமா என ரசிகர்களுக்கு எதிர்ப்பார்த்து காத்துள்ளனர்.

ஷேர் இ பங்களா மைதானத்தில் மைதானத்தில் 22 போட்டிகளில் விளையாடி உள்ள இந்திய அணி 14 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியையும் தழுவியுள்ளது. மழை காரணமாக ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர் தோல்விக்கு பிறகு, இந்திய அணி அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை வெல்லும் முனைப்பில் உள்ளது. இதற்காக டி20 உலகக் கோப்பை பின் நியூசிலாந்து சென்ற இந்திய அணி டி20 தொடரை வென்ற கையோடு, ஒருநாள் தொடரை இழந்தது. 

அந்த தொடரில் டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவானும் தலைமை தாங்கினர்.

மற்ற தொடர்கள், மற்ற நாடுகள் சுற்றுபயணம் மேற்கொள்ளும்போது வங்கதேச அணி தடுமாறினாலும், தனது சொந்த மண்ணில் எதிரணிகளை புலியாக புரட்டி எடுத்து வருகிறது. கடைசியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு டி20 தொடரை வென்றது. அதேபோல், கடந்த 2015ம் ஆண்டு சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் வென்றது. அதேபோல், 2007 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி, வங்கதேசத்திற்கு தோல்வியடைந்தது இன்றளவும் யாராலும் மறக்க முடியாதது. 

கணிக்கப்பட்ட இந்திய அணி: 

1. ரோகித் ஷர்மா (கேப்டன்), 2. ஷிகர் தவான், 3. விராட் கோலி, 4. ஷ்ரேயாஸ் ஐயர், 5. கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), 6. உம்ரான் மாலிக், 7. வாஷிங்டன் சுந்தர், 8. அக்சர் படேல், 9. ஷர்துல் தாக்கூர், 10. தீபக் சாஹர், 11. முகமது சிராஜ்

கணிக்கப்பட்ட வங்கதேச அணி:

1. லிட்டன் தாஸ் (கேப்டன்), 2. அனாமுல் ஹக், 3. ஷாகிப் அல் ஹசன், 4. முஷ்பிகுர் ரஹீம் (வாரம்), 5. மஹ்முதுல்லா, 6. அபிஃப் ஹொசைன், 7. யாசிர் அலி, 8. மெஹிதி ஹசன் மிராஸ், 9. ஹசன் மஹ்மூத், 10. முஸ்தபிஸுர் ரஹ்மான், 11. எஹோபாஸ் ஹின்து

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை மெட்ரோ அதிமுக ஆட்சியில் தான் வரும் செல்லூர் ராஜூ சொல்ல வருவது என்ன?
மதுரை மெட்ரோ அதிமுக ஆட்சியில் தான் வரும் செல்லூர் ராஜூ சொல்ல வருவது என்ன?
GATE 2026 தேர்வு அட்டவணை வெளியீடு: IIT கவுஹாத்தி அறிவிப்பு! முக்கிய தேதிகள், பாடத்திட்டம் இதோ!
GATE 2026 தேர்வு அட்டவணை வெளியீடு: IIT கவுஹாத்தி அறிவிப்பு! முக்கிய தேதிகள், பாடத்திட்டம் இதோ!
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 22-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னை மக்களே.! நவம்பர் 22-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai School Bus Fire | திடீரென தீப்பற்றிய SCHOOL BUSHERO-வாக மாறிய டிரைவர் மதுரையில் பரபரப்பு
cyclone season starts |
Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி
Kaliyammal TVK | தவெகவில் காளியம்மாள்? விஜய்யின் MASTERPLAN! ஆட்டத்தை ஆரம்பித்த தவெக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை மெட்ரோ அதிமுக ஆட்சியில் தான் வரும் செல்லூர் ராஜூ சொல்ல வருவது என்ன?
மதுரை மெட்ரோ அதிமுக ஆட்சியில் தான் வரும் செல்லூர் ராஜூ சொல்ல வருவது என்ன?
GATE 2026 தேர்வு அட்டவணை வெளியீடு: IIT கவுஹாத்தி அறிவிப்பு! முக்கிய தேதிகள், பாடத்திட்டம் இதோ!
GATE 2026 தேர்வு அட்டவணை வெளியீடு: IIT கவுஹாத்தி அறிவிப்பு! முக்கிய தேதிகள், பாடத்திட்டம் இதோ!
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 22-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னை மக்களே.! நவம்பர் 22-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
Hyundai Grand i10 Nios வாங்க ப்ளான் பண்ணிருக்கீங்களா? விலை, மைலேஜ், தரம் தெரிஞ்சுக்கோங்க
Hyundai Grand i10 Nios வாங்க ப்ளான் பண்ணிருக்கீங்களா? விலை, மைலேஜ், தரம் தெரிஞ்சுக்கோங்க
Ind vs SA: விலகிய கில்.. கேப்டனான பண்ட்.. நாளை கவுகாத்தியில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட்
Ind vs SA: விலகிய கில்.. கேப்டனான பண்ட்.. நாளை கவுகாத்தியில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட்
மகளின் மருத்துவ செலவுக்காக வைத்திருந்த பணத்தை இழந்தேன்...நடிகர் பிளாக் பாண்டி சொன்ன ஷாக் தகவல்
மகளின் மருத்துவ செலவுக்காக வைத்திருந்த பணத்தை இழந்தேன்...நடிகர் பிளாக் பாண்டி சொன்ன ஷாக் தகவல்
Weapons: இந்தியா இல்லை.. அமெரிக்காவிடம் இருந்து ஆயுங்களை வாங்கி குவிக்கும் நாடு பற்றி தெரியுமா? ஏன்?
Weapons: இந்தியா இல்லை.. அமெரிக்காவிடம் இருந்து ஆயுங்களை வாங்கி குவிக்கும் நாடு பற்றி தெரியுமா? ஏன்?
Embed widget