Virat Kohli’s New Phone: புதிய போனை வாங்கிய கோலி.. பார்க்காமலே தொலைத்த சோகம்... ட்விட்டரில் பதிவிட்டு சோகம்..!
புதிய போன் வாங்கி அன்பாக்ஸ் செய்யாமல் தொலைந்து விட்டால் இதை விட பெரிய துக்கம் வேறில்லை என கோலி ட்வீட் செய்துள்ளார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 9ம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்பால, இந்திய அணியின் நட்சத்திட வீரர் விராட் கோலிக்கு ஒரு மோசமான நிகழ்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. அது என்னவென்றால், கோலி ஆன்லைன் மூலம் ஒரு புதிய போனை வாங்கியுள்ளார். அதை அன்பாக்ஸ் செய்யாமாலே தொலைந்து போயுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Nothing beats the sad feeling of losing your new phone without even unboxing it ☹️ Has anyone seen it?
— Virat Kohli (@imVkohli) February 7, 2023
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், புதிய போன் வாங்கி அன்பாக்ஸ் செய்யாமல் தொலைந்து விட்டால் இதை விட பெரிய துக்கம் வேறில்லை. யாராவது அதை பார்த்தீர்களா? உங்களுக்கும் இப்படிப்பட்ட நிகழ்வு நடந்து இருக்கிறதா? என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பினார்.
அந்த ட்வீட்டிற்கு பதில் அளிக்கும் வகையில் Zomato:
feel free to order ice cream from bhabhi's phone if that will help 😇
— zomato (@zomato) February 7, 2023
கோலியின் இந்த பதிவிற்கு பல ரசிகர்கள் அவருக்கு ஆதரவை தெரிவித்து வருகின்றன. கோலிக்கு என்ன நடந்தது? என்ன பிரச்சினை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஆஸ்திரேலியா தொடரில் கோலி படைக்க இருக்கும் சாதனை:
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதங்கள்:
கோலி விளையாடும் இந்த காலக்கட்டத்தில் அவருக்கு பிடித்த எதிரணிகளில் ஆஸ்திரேலியா அணியும் ஒன்று. இந்த அணிக்கு எதிரான கோலி இதுவரை 7 சதங்கள் அடித்துள்ளார். இதன்மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
11 சதங்களுடன் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு அடுத்த படியாக சுனில் கவாஸ்கர் 8 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். வருகிற தொடரில் குறைந்தது கோலி இரண்டு சதங்கள் அடித்தால், கவாஸ்கரை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறுவார்.
சேவாக் சாதனை முறியடிக்க வாய்ப்பு:
பார்டர்- கவாஸ்கர் டிராபியில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக்கின் மற்றொரு முக்கிய சாதனையை கோலி முறியடிக்க வாய்ப்புள்ளது. தற்போது, கோலி தனது டெஸ்ட் வாழ்க்கையில் 8119 ரன்கள் எடுத்துள்ளார். இந்த நான்கு டெஸ்டிலும் சேர்த்து அவர் 391 ரன்கள் எடுத்தால், இந்தியாவுக்காக டெஸ்டில் அதிக ரன் குவித்த பேட்ஸ்மேன் பட்டியலில் சேவாக்கை பின்னுக்கு தள்ளுவார். சேவாக் இதுவரை டெஸ்டில் 8503 ரன்கள் எடுத்துள்ளார். இந்த தொடரில் சேவாக்கை கோலி முந்தினால் இந்தியாவுக்காக அதிக டெஸ்ட் ரன்களை குவித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை பெறுவார்.
சச்சினை கடக்க வாய்ப்பு:
இந்த டெஸ்ட் தொடரில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மற்றொரு முக்கியமான சாதனையை முறியடிக்க கோலிக்கு வாய்ப்பு உள்ளது. தற்போது, கோலி அனைத்து வடிவங்களிலும் சேர்த்து 546 இன்னிங்ஸ்களில் 24,936 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரில் 64 ரன்களை கோலி எடுத்தால், சர்வதேச அளவில் 25,000 ரன்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற வரலாறு படைப்பார். தற்போது இந்த சாதனை சச்சின் வசம் உள்ளது. சச்சின் 576 இன்னிங்ஸ்களில் 25 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். அதைவிட வேகமாக இந்த சாதனையை கோலி எட்டுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.