Virat Kohli : கொன்ஸ்டாஸுடன் மோதல்! ஜஸ்ட் மிஸ்சில் தப்பித்த கோலி.. 20% அபராதம் விதித்த நடுவர்
Virat Kohli : முன்னாள் இந்திய கேப்டன் ஐசிசி விதிகளை மீறியதை ஏற்றுக்கொண்ட நிலையில் போட்டி கட்டணத்தில் இருந்து 20 சதவீகிதம் அபராதமும் ஒரு டிமெரிட் புள்ளியும் கொடுக்கப்பட்டது.
மெல்போர்னில் நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா 4வது டெஸ்டில் அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸுடன் மோதல் விவகாரத்தில் இந்திய வீரர் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பாக்சிங் டே டெஸ்ட்:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸ் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.
இதையும் படிங்க: Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
கோலியுடன் மோதல்:
ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் 10வது ஓவர் முடிந்ததும் வீரர்கள் அடுத்து ஓவருக்கு தயாராகினர். அப்போது கோலி மற்றும் கான்ஸ்டாஸ் ஆகிய இருவரும் தோள்ப்பட்டையில் இடித்துக்கொண்டனர். அப்போது இருவருக்கும் இடையே வார்த்தை மோதல்களும் இருந்தது. இதனிடையே சக வீரர் உஸ்மான் கவாஜா அவர்கள் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுப்பட்டார். கள நடுவர்களும் இருவருடனும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
"Have a look where Virat walks. Virat's walked one whole pitch over to his right and instigated that confrontation. No doubt in my mind whatsoever."
— 7Cricket (@7Cricket) December 26, 2024
- Ricky Ponting #AUSvIND pic.twitter.com/zm4rjG4X9A
கோலிக்கு அபராதம்:
இந்த மோதல் விவகாரம் தொடர்பான போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் உடனான விராட் கோலியின் சந்திப்பு வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. முன்னாள் இந்திய கேப்டன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தை விதிகளை மீறியதை ஏற்றுக்கொண்டார். இதனால் அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 20 சதவீகிதம் அபராதமும் ஒரு டிமெரிட் புள்ளியும் கொடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: Watch Video: அண்ணன் இங்கயே ஆரம்பிச்சுட்டாரு! சாம் கோன்ஸ்டாசை இடித்து தள்ளிய விராட் கோலி!
கொன்ஸ்டாஸ் பேச்சு:
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய கொன்ஸ்டாஸ் "களத்தில் என்ன நடந்தாலும் அது களத்தில் இருக்கும். நான் களத்தில் போட்டியிடுவதை விரும்புகிறேன், இவ்வளவு பெரிய ஸ்டேடியத்தில் இத்தனை ஆயிரம் மக்களுக்கு முன்பாக எனக்கு இதைவிட சிறந்த அறிமுகம் கிடைத்து இருக்காது" என்று கான்ஸ்டாஸ் கூறினார்.
"I'll look to keep targeting him. Hopefully he might come back on."
— cricket.com.au (@cricketcomau) December 26, 2024
Sam Konstas wants round two with Jasprit Bumrah: https://t.co/LSqCHmF7kH#AUSvIND pic.twitter.com/LvJAmaCACb
பலரும் கோலியின் இந்த நடத்தைக்கு தடை வரும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில் அவருக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது.