Watch Video: மிகவும் பிடித்த வீரர்.. தோனியா? டிவில்லியர்ஸா? கோலி சொன்ன சுவாரஸ்ய பதில்
தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்விக்கு விராட் கோலி பதிலளித்துள்ளார்.
16 ஆண்டுகளை நிறைவு செய்த கோலி:
இந்திய அணி வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் அடி எடுத்து வைத்து நேற்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்நிலையில் 16 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அவர் சில சுவாரஸ்ய கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதாவது விராட் கோலியிடன் 16 கேள்விகள் ரேபிட் ஃபயர் ரவுண்டு மூலம் கேட்கப்பட்டது.
மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்:
இதில் குறிப்பாக மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்கப்பட்டு அதில் மகேந்திர சிங் தோனியா? அல்லது டிவில்லியர்சா? என இரண்டு ஆப்ஷன்கள் கேட்கப்பட இருவரையும் தேர்வு செய்தார். தனக்குப் பிடித்த ஷாட் கவர் டிரைவ் என்றும் இந்தியாவில் ஃபேவரிட் மைதானமாக பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தை தேர்வு செய்தார்.
Celebrating 16 glorious years of Virat Kohli in international cricket!
— Star Sports (@StarSportsIndia) August 18, 2024
Join us, as we ask @imVkohli about his favorite cricketer, TV show, singer, and 16 other exciting questions in a fun, rapid-fire round to celebrate #16YearsOfVirat! #KingKohli #16YearsOfVirat #ViratKohli pic.twitter.com/S8kJ0x61ws
நகைச்சுவையான கிரிக்கெட் வீரர் கெயில் எனவும், டெல்லிக்கு அடுத்தபடியாக மும்பை மைதானத்தை தனது சொந்த மைதானம் என்று பதிலளித்துள்ளார் விராட் கோலி. அதேபோல் பிடித்த பாடகர் யார் என்ற கேள்விக்கு அர்ஜித் சிங் என்றும் , பிடித்த பண்டிகை எது என்று கேட்டதற்கு தீபாவளி என்று பதிலளித்தார் விராட் கோலி.
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்கு பிறகு குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வரும் விராட் கோலி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு தயாராகி வருகிறார். முன்னதாக, விராட் கோலி 2011 இல் ஒருநாள் உலகக் கோப்பையையும், 2013 இல் சாம்பியன்ஸ் டிராபியையும், 2024 இல் டி20 உலகக் கோப்பையையும் வென்றுள்ளார். அதேபோல் தான் கேப்டனாக பொறுப்பேற்று இந்திய அணியை வழி நடத்தியதில் 68 போட்டிகளில் 40 போட்டிகளில் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற இந்திய டெஸ்ட் கேப்டன் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்திருக்கிறார்.