Watch Video: விராட் கோலிக்கு திடீரென லிப் லாக்.. வீடியோ வெளியிட்டு ரசித்த ரசிகை.. ட்விட்டரில் திட்டிதீர்க்கும் ரசிகர்கள்!
உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் விராட் கோலியை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் என்று கனவு காண்பர். விராட்டை சந்தித்து ஆட்டோகிராப் வாங்கும் அதிர்ஷ்டம் அனைத்து ரசிகர்களுக்கும் கிடைப்பதும் இல்லை.
இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி, சச்சின் மற்றும் தோனிக்கு பிறகு அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். உலக கிரிக்கெட்டிலும் மிகவும் கொண்டாடப்பட்ட பெயர்களிலும் ஒன்றாக இருந்து வருகிறார்.
இந்தநிலையில் விராட் கோலிக்கு ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் 134 மில்லியன் பாலோவர்ஸ்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இவர் கடந்த 2017 ம் ஆண்டு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் விராட் கோலியை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் என்று கனவு காண்பர். விராட்டை சந்தித்து ஆட்டோகிராப் வாங்கும் அதிர்ஷ்டம் அனைத்து ரசிகர்களுக்கும் கிடைப்பதும் இல்லை.
இந்தசூழலில் சமீபத்தில், விராட் கோலி குறித்த வீடியோ ஒன்று இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. அந்த வீடியோவில் விராட் கோலியின் தீவிர பெண் ரசிகர் ஒருவர் அவரது மெழுகு சிலையை கட்டிபிடித்து லிப் லாக் செய்துள்ளார். அந்த பெண் முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
விராட் கோலி மெழுகு சிலை:
விளையாட்டு மற்றும் பொதுசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு சாதனை புரியும் பிரபலங்களுக்கு டெல்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்படும். இதையடுத்து, கடந்த 2018 ஜூன் மாதம் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலிக்கி அந்த அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை அமைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில்தான் அந்த பெண் கோலியின் சிலைக்கு கட்டிப்பிடித்து முத்தமிட்டுள்ளார்.
வீடியோவை பார்க்க:-
Yeh dekhne se pehle main mar kyu nahi gayi😭😭😭😭 pic.twitter.com/vpTjmGXNUy
— Viratian forever! (@viratdiaries_) February 19, 2023
இந்த வீடியோவை பார்த்த கோலியின் ரசிகர்கள் அந்த முத்தமிட்ட பெண்ணை ட்விட்டர் பக்கத்தில் திட்டி வருகின்றனர். ஒரு சிலர் தங்களுக்கு பிடித்தவருக்கு தாங்களால் முடிந்த அன்பை வெளிபடுத்துகின்றனர். இதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்புகின்றனர்.
விராட் கோலியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா மட்டும் இந்த வீடியோவை பார்த்தால் அந்த பெண்ணின் உதடுகளை கிழித்துவிடுவார் என்று ட்விட்டர்வாசி ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.