Virat Kohli Sportsmanship: அந்த மனசுதான் சார் கடவுள்...! எதிரியா இருந்தாலும் திறமைக்கு மரியாதை! கத்துக்கொடுத்த கோலி..!
இங்கிலாந்து வீரர் ஜானி பார்ஸ்டோவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் அவர் சதமடித்தபோது விராட்கோலி கைதட்டி பாராட்டியதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தற்போது 257 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இந்த போட்டியில் விராட்கோலியின் செயல்பாடுகள் பலராலும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் பார்ஸ்டோ பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அவருக்கும் விராட்கோலிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தன்னை சீண்டிய பார்ஸ்டோவை விராட்கோலி வாயை மூடி பேட் செய் என்று கூறினார். களத்தில் இருவரும் மோதிக்கொண்ட வீடியோ வைரலாகியது.
பார்ஸ்டோவுடன் என்னதான் மோதிக்கொண்டாலும் பார்ஸ்டோ சதமடித்தபோது விராட்கோலி கைதட்டி வாழ்த்து கூறினார். ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பிற்கு எப்போதுமே மிகப்பெரிய உதாரணமாக திகழும் விராட்கோலியின் இந்த செயல் அவரது ரசிகர்களாலும், கிரிக்கெட் ரசிகர்களாலும் பெரிய அளவில் வரவேற்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க : Kohli Viral Video: "வாயை மூடிகிட்டு பேட் பண்ணு.." சீண்டிய பார்ஸ்டோவிடம் சீறிய விராட்கோலி..!
மேலும், இந்த போட்டியில் இந்திய அணி பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது களத்தில் பும்ராவுக்கு ஏராளமான அறிவுரைகளை வழங்கினார். அவரது அறிவுரைகளின்படி பந்துவீசியும், பீல்டிங் செட்டப்பையும் மாற்றிய பும்ராவிற்கு கைமேல் பலனாக இங்கிலாந்து அணி 284 ரன்களுக்கு சுருண்டது. இந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நல்ல தலைவன் எப்போதும் கேப்டனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று ரசிகர்கள் விராட்கோலியை பாராட்டி வருகின்றனர். ரிஷப்பண்ட், ஜடேஜா சதமடித்தபோதும், பும்ரா ஒரே ஓவரில் 35 ரன்கள் விளாசியபோதும் விராட்கோலி கைதட்டி வாழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் விராட்கோலி அசத்துவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த இன்னிங்சிலும் அவர் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
மேலும் படிக்க : IND vs ENG, 5th Test: முன்னிலை பெற்ற இந்தியா... சிக்கலில் இங்கிலாந்து... 2வது இன்னிங்ஸிலும் மிரட்டுவாரா பண்ட்?
மேலும் படிக்க : Yuvraj on Bumrah record: இது யுவராஜா?..பும்ராவா?.. சச்சின் போட்ட ட்வீட்டிற்கு யுவராஜ் சிங் சொன்ன பதில் தெரியுமா?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்