Virat Kohli 1st Century: 12 ஆண்டுகளுக்கு முன்... விராட் கோலியின் சத வேட்டை தொடங்கிய நாள் இன்று ! மெமரீஸ்..
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோலி 2009ஆம் ஆண்டு தன்னுடைய முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மிஷன் என்று அழைக்கப்படுபவர் விராட் கோலி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் 2009ஆம் ஆண்டு முதல் களமிறங்கி வருகிறார். கிட்டதட்ட 12 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் விராட் கோலி தற்போது வரை 70 சதங்களை அடித்துள்ளார். இந்த சதங்கள் அனைத்திற்கும் தொடக்க இடமாக அமைந்தது இலங்கை அணிக்கு எதிராக அடித்த முதல் சதமாகும்.
இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு முன்பாக இதேநாளில் விராட் கோலி தன்னுடைய முதல் சர்வதேச சதத்தை அடித்தார். 2009ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி கொல்கத்தாவில் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் போட்டியில் விளையாடியது. அந்தப் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து 316 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
அப்போது தொடக்க ஆட்டக்காரர்கள் சச்சின் டெண்டுல்கர்(8) மற்றும் வீரேந்திர சேவாக் (10) ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதன்பின்னர் ஜோடி சேர்ந்த கவுதம் கம்பீர்-விராட் கோலி ஜோடி இலங்கை பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. இருவரும் சதம் கடந்து இந்திய அணியை வெற்றி பாதை அழைத்து சென்றனர். குறிப்பாக 114 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி தன்னுடைய முதல் சதத்தை அன்று பதிவு செய்தார். விராட் கோலி அதன் பின்னர் டெஸ்ட் ஒருநாள் என மொத்தமாக 69 சதங்களை சர்வதேச போட்டிகளில் அடித்துள்ளார்.
ஆண்டு வாரியாக விராட் கோலியின் ஒருநாள் சதங்கள்:
ஆண்டு | கோலி அடித்த சதங்கள் |
2009 | 1 |
2010 | 3 |
2011 | 4 |
2012 | 5 |
2013 | 4 |
2014 | 4 |
2015 | 2 |
2016 | 3 |
2017 | 6 |
2018 | 6 |
2019 | 5 |
2020 | 0 |
2021 |
0 |
கடைசியாக அவர் 2019-ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் 5 சதங்கள் அடித்தார். அதன் பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சதம் கூட அடிக்காதது பெரிய வருத்தமாக அமைந்துள்ளது. இனி இந்த ஆண்டில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி உள்ளது. வரும் டிசம்பர் 26-ஆம் தேதி தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகள் இடையே முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அதிலாவது விராட் கோலி சதம் அடிப்பாரா? என்ற ஏக்கம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
மேலும் படிக்க: ”அனைத்து நல்ல விஷயங்களுக்கும் முடிவு வரும்.." - ஓய்வை அறிவித்தார் ஹர்பஜன் சிங்