PAK Fielding Drills: விமர்சனத்திற்குள்ளாகும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஃபீல்டிங் பயிற்சி முறை: வைரல் வீடியோ!
PAK Fielding Drills: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மெத்தை பயன்படுத்தி கேட்ஸ், ஃபீல்சிங் பயிற்சி மேற்கொள்வது விவாதத்திற்குள்ளாகியுள்ளது பற்றிய விவரங்களை காணலாம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பழைய நுட்பத்தை பின்பற்றி ஃபீல்டிங், கேட்ச் பயிற்சி செய்யும் வீடியோ வெளியாக சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. கிரிக்கெட் வீரர்களின் பயிற்சிக்கு தேவையான வசதிகள் இல்லாத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டுகொள்ளவில்லை என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை டி-20 தொடரில் பாகிஸ்தான் அணி குரூப் ஸ்டேஜிலேயே தொடரைவிட்டு வெளியேறியது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உலகக் கோப்பை தொடரை முடிந்தது இந்தாண்டு இறுதியில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. அப்படியிருக்க, வீரர்கள் அதற்கு தயாராகிவருகின்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியொவை பலரும் பகிந்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Pakistan players doing fielding practice with bed mattresses. Do top teams like India, England, South Africa, Australia or England also train like this? This is why we are so much behind. It hurts 🇵🇰🇮🇳💔💔💔pic.twitter.com/6hcJc5zgkZ
— Farid Khan (@_FaridKhan) July 3, 2024
சமூக வலைதளத்தில் ஒருவர் பகிந்துள்ள வீடியோவில், பாகிஸ்தான் அணி வீரர்கள் ஃபீல்டிங், கேட்ச் பயிற்சி மேற்கொள்ளும்போது கீழே விழுந்தால் தடுப்பதற்கு மெத்தையை பயன்படுத்துகின்றனர். அதுவும் மிகவும் பழமையான, அழுக்கான மெத்தையை பயன்படுத்தும்படி வீடியோவில் உள்ளது. பந்தை பிடிக்கும்போது ஒரு வீரர் மெத்தை மீது விழுகிறார். இந்த டெக்னிக் ஆரம்ப காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஒன்று. இப்போதும் இதை இவர்கள் பயன்படுத்தி வருகிறார்களே என்று சில ரசிகர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடி வருகின்றனர்.
”பாகிஸ்தான் கிர்க்கெட் வாரியம் வீரர்கள் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரமால் இருக்கிறது. பயிற்சி செய்யவே வசதியில்லை. பிறகு எப்படி போட்டிகளை வெல்ல முடியும்?” என்று ஒரு பயனர் எக்ஸ் வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
மற்றொருவர் “ இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் இப்படி பழைய முறையை பின்பற்றியா பயிற்சி மேற்கொள்வார்கள். இவர்களுக்கு அடிப்படை வசதியே இன்னும் கிடைக்கவில்லை” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் ஃபீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. யுனைடட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா, இந்தியா ஆகிய அணிகளோடு பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. இந்தியாவுடன் சூப்பர் ஓவரில் தோற்றது. யு.எஸ்.ஏ. உடன் 120 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
குறிப்பாக அசான் கான் மோசமான பர்ஃபாமன்ஸ், வீரர்களின் தவறான ஓவர் த்ரோ உள்ளிட்டவைகள் கடும் சர்ச்சை கிளப்பியது. இந்நிலையில், வெளியாகியிருக்கும் இந்த வீடியோ பேசுபொருளாகியுள்ளது.
ஒருவர் ,”மைதானத்தில் ஃபீல்ட் பண்ண அச்சம் உள்ளவர்கள் எப்படி கிர்க்கெட் அணியில் இருக்க முடியும். மெத்தை பயன்படுத்தி பயிற்சி மேற்கொண்டால் மைதானத்தில் எப்படி சரியாக ஃபீல்ட் செய்ய முடியும்?” என்று தெரிவித்திருக்கிறார்.