மேலும் அறிய

Vaibhav Sooryavanshi: அடிச்சா சிக்ஸரு..! U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மின்னல் வேக சதம் அடித்த சூர்யவன்ஷி!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 55 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரேவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றனர். 

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டி:

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்காக ஆரோன் ஜார்ஜ் - வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங்கைத் தொடங்கினர். அரையில் சதம் விளாசிய ஆரோன் ஜார்ஜ் 9 ரன்னில் அவுட்டாக, அடுத்து கேப்டன் ஆயுஷ் மாத்ரே - வைபவ் சூர்யவன்ஷி ஜோடி சேர்ந்தனர். 

சிக்ஸர் மழை:

இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடினார். சூர்யவன்ஷி டி20 போட்டி போல ஆடினார். அவருக்கு கேப்டன் ஆயுஷ் மாத்ரே ஒத்துழைப்பு அளித்தார். ஆயுஷ் மாத்ரே ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விளாச, சூர்யவன்ஷி சிக்ஸரும், பவுண்டரியும் விளாசினார். 

இந்த ஜோடியை பிரிக்க செபாஸ்டியன் மோர்கன், அலெக்ஸ் கிரீன், லும்ஸ்டன், மின்டோ, ஃபர்கான் அகமது, ஆல்பர்ட் என பலரையும் அந்த அணியின் கேப்டன் தாமஸ் ரே மாறி, மாறி பயன்படுத்தினார். ஆனால், மைதானம் பேட்டிங்கிற்கு நன்றாக ஒத்துழைத்தது. 

55 பந்துகளில் சதம்:

சிறப்பாக ஆடிய சூர்யவன்ஷி அரைசதம் விளாசினார். மறுமுனையில் கேப்டன் ஆயுஷ் மாத்ரே அரைசதம் விளாசி அவுட்டானார். அவர் 51 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 53 ரன்களுடன் அவுட்டானார். 

ஆனாலும், மறுமுனையில் அபாரமாக ஆடிய சூர்யவன்ஷி சதம் விளாசினார்.   அபாரமாக ஆடிய சூர்யவன்ஷி 55 பந்துகளில் சதம் விளாசினார். அதில் 8 சிக்ஸர், 8 பவுண்டரி அடங்கும். சூர்யவன்ஷியின் அபார சதத்தால் இந்திய அணி 20 ஓவர்களிலே 200 ரன்களை கடந்து ஆடி வருகிறது. தொடர்ந்து அபாரமாக ஆடி வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 15 பவுண்டரி 15 சிக்ஸருடன் 175 ரன்கள் எடுத்து கடைசியில் அவுட்டானார். இந்திய அணி 25.3 ஓவர்களில் 251 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

மிரட்டல் பேட்டிங்:

சூர்யவன்ஷி அடித்த பல சிக்ஸர்கள் மைதானத்தை விட்டு வெளியே சென்றது. 2011ம் ஆண்டு பிறந்த சூர்யவன்ஷியின் அபாரமான பேட்டிங் திறமையை கண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை அணியில் ஏலத்தில் எடுத்தது. வெறும் 14 வயதே ஆன அவரை ஏலத்தில் எடுத்தபோது பலரும் ஆச்சரியப்பட்டனர். கடந்த ஐபிஎல் தொடரிலே அவர் குஜராத் அணிக்கு எதிராக சதம் விளாசி தன்னை ஏலத்தில் எடுத்ததன் காரணத்தை அனைவருக்கும் உணர்த்தினார். 

தொடர்ந்து அபாரமாக ஆடி வந்த அவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் முக்கிய வீரராக பிசிசிஐ மாற்றியது. இந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடரில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த சூர்யவன்ஷி தனது முதல் சதத்தை இன்று விளாசியுள்ளார். அதுவும் அதிரடி சதமாக மாற்றி அணிக்கு பக்கபலமாக உள்ளார். 

தலைப்பு செய்திகள்

18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
Embed widget