மேலும் அறிய

ICC Player of the Month: ஐசிசி-யின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார்? பரிந்துரைப் பட்டியலில் 2 இந்திய வீரர்கள்..!

ICC Player of the Month: சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு, இந்திய வீரர்கள் 2 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ICC Player of the Month: சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு, இந்திய வீரர்கள் சுப்மன் கில் மற்றும் முகமது சிராஜ் உள்ளிட்ட 3 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஐசிசி விருதுகள்:

கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாதமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும், வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் விருது வழங்கி வருகிறது. இதற்காக மூன்று வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு, இறுதியில் வாக்குகளின் அடிப்படையில் முதலிடம் பிடிப்பவருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர்களுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இந்திய தொடக்க விரர் சுப்மன் கில், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான டேவிட் மாலனின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

சுப்மன் கில்:

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் சுப்மன் கில்,  செப்டம்பர் மாதத்தில் 80 சராசரியுடன் மொத்தம் 480 ரன்களை குவித்துள்ளார். ஆசியக் கோப்பை தொடரில் இரண்டு அரைசதங்கள் மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்தினார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  மொஹாலியில் நடந்த தொடரின் முதல் போட்டியில் 74 ரன்களை எடுத்ததோடு,  இந்தூரில்நடைபெற்ற போட்டியில் 104 ரன்களை எடுத்தார். அவரது அபார ஃபார்ம் இந்தியா ஆசியக்கோப்ப மற்றும் ஆஸ்திரேலியா உடனான தொடரை வெல்ல உதவியது.

முகமது சிராஜ்:

வலது கை வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் செப்டம்பர் மாதத்தில் இந்திய அணி, ஆசியக் கோப்பையை கைப்பற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார். அதிலும், இலங்கை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் வெறும் 21 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இது ஒருநாள் போட்டிகளில் அவரது சிறந்த பந்துவீச்சாகும்.  மொத்தத்தில், சிராஜ் 17.27 சராசரியில் செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 11 விக்கெட்டுகளை எடுத்தார்.

டேவிட் மாலன்:

நியூசிலாந்து உடனான தொடரில் இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் மாலன், தொடர் நாயகன் விருதை வென்றார். அந்தத் தொடரின் போது மாலன் மூன்று போட்டிகளில் விளையாடி 54, 96 மற்றும் 127 ரன்களைப் பதிவுசெய்தார்.தொடரின் போது ஒட்டுமொத்தமாக 105.72 ஸ்ட்ரைக் ரேட்டைப் பெற்றார். இதன் மூலம் மேற்குறிப்பிடப்பட்ட 3 வீரர்களும் செப்டம்பர் மாதத்திற்கான, ஐசிசியின் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு விரைவில் விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.

மகளிர் பிரிவு:

இதனிடையே, சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் தென்னாப்பிரிக்க வீராங்கனைகளான லாரா வோல்வார்ட் மற்றும் நாடின் டி கிளர்க்கும், இலங்கை அணியின் கேப்டன் சமாரி அதபத்தும் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget