மேலும் அறிய

T20 World Cup 2024: ரூ.1.86 கோடிக்கு விற்பனையான இந்தியா-பாகிஸ்தான் டிக்கெட்! அதிர்ச்சியில் உறைந்த கிரிக்கெட் உலகம்!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கான டிக்கெட் விலை ரூ. 1.89 கோடிக்கு சென்றுள்ளது.

இந்த ஆண்டு ஐசிசி கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு ஒன்னான வாய்ப்பு உள்ளது. வருகின்ற ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நடத்தும் டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. இதில், இந்திய அணி தனது முதல் போட்டியில் வருகின்ற ஜூன் 5ம் தேதி அயர்லாந்தை எதிர்கொள்கிறது. 

இரண்டாவது போட்டியில் ஜூன் 9ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணி, மூன்றாவது போட்டியில் ஜூன் 12ம் தேதி அமெரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த மூன்று போட்டிகளும் நியூயார்க்கில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், கடந்த பிப்ரவரி முதல் வாரம் முதலே உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையை ஐசிசி தொடங்கியது. 

இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் உட்பட அனைத்து போட்டிகளுக்கான டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது அனைத்து போட்டிகளின் டிக்கெட்களும் ஒரு சில டிக்கெட் விற்பனை தளங்களில் மறுவிற்பனை செய்யப்படுவதாகவும், இந்த டிக்கெட்கள் stubhub மற்றும் seatgeek ஆகிய டிக்கெட் விற்பனை தளங்களில் கிடைத்து வருவதாகவும் செய்திகள் வருகின்றனர். 

இதில், மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்திய அணியின் இரண்டு போட்டிகளுக்கான ஒரு டிக்கெட் விலை பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கான டிக்கெட் விலை ரூ. 1.89 கோடிக்கு சென்றுள்ளது. அமெரிக்காவில் திட்டமிடப்பட்ட போட்டிகளின் அனைத்து டிக்கெட்டுகளும் அதிகாரப்பூர்வ தளத்தில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அதன்படி, ஒரு டிக்கெட்டின் விலை 6 டாலராக இருந்த நிலையில், இப்போது ப்ளாக் மார்க்கெட்டில் 400 டாலருக்கு (சுமார் ரூ.33,148) கிடைக்கிறது. பிரீமியம் டிக்கெட்டின் விலை 400 டாலராக இருந்த நிலையில், இப்போது ப்ளாக் மார்க்கெட்டில் 40,000 டாலர்களுக்கு (சுமார் 33 லட்சம் ரூபாய்) கிடைக்கிறது. 

ஐசிசி சொன்னது என்ன..? 

ஐசிசியின் கூற்றுப்படி, முதல் கட்ட டிக்கெட் விற்பனையின்போது, ஒரு டிக்கெட்டுகளின் குறைந்தபட்ச விலை ரூ. 497 ஆகும். அதேநேரத்தில் ஒரு விக்கெட்டின் அதிகபட்ச விலை ரூ. 33, 148 (வரி இல்லாமல்) ஆகும். இது தவிர கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. 

இருப்பினும், ஐசிசியிடம் வாங்கப்பட்ட விஜபி டிக்கெட் ஒன்று மற்றொரு டிக்கெட் விற்பனை தளங்களில் சுமார் ரூ.33.15 லட்சமாக இருந்தது. வரி உள்ளிட்ட கட்டணத்தை சேர்த்தால் ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 41.44 லட்சத்தை தொட்டுள்ளது. 

அதே நேரத்தில், StubHubல் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான மலிவான டிக்கெட் ரூ. 1.04 லட்சமும், SeatGeek இல் மிகவும் விலையுயர்ந்த டிக்கெட் ரூ.1.86 கோடியாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. இதுபோக, இந்த டிக்கெட் விற்பனை தளங்களில் டிக்கெட்டுடன் கூடுதல் கட்டணங்களும் அடங்கும். கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான மிக விலையுயர்ந்த டிக்கெட் விலையே  ரூ. 57.15 லட்சமாகதான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவும் பாகிஸ்தானும் இதற்கு முன் 2007 (இறுதிப் போட்டி உட்பட), 2012, 2014, 2016, 2021, மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையில் ஏழு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. 2009ஆம் ஆண்டு மட்டும் போட்டியில் நேருக்கு நேர் சந்திக்கவில்லை. இதில், பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே போட்டியில் மட்டும் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாணவர்களே ரெடியா!
மாணவர்களே ரெடியா! "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயற்சி.. வந்தது அப்டேட்!
Airtel AI: ஸ்பேம் அழைப்புகளுக்கு எதிராக AI: களத்தில் இறக்கிய ஏர்டெல் நிறுவனம்.!
ஸ்பேம் அழைப்புகளுக்கு எதிராக AI: களத்தில் இறக்கிய ஏர்டெல் நிறுவனம்.!
"விவசாயிகளுக்கு சேவை செய்வது கடவுளை வணங்குவது போன்றது" உருக்கமாக பேசிய மத்திய அமைச்சர்!
பாஜகவுக்கு கேட் அவுட்.. எதிரி கட்சியுடன் கைகோர்க்கும் பரூக் அப்துல்லா.. காஷ்மீரில் காத்திருக்கும் ஷாக்
பாஜகவுக்கு கேட் அவுட்.. எதிரி கட்சியுடன் கைகோர்க்கும் பரூக் அப்துல்லா.. காஷ்மீரில் காத்திருக்கும் ஷாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin on Marina Airshow : ’’இவ்ளோ மக்கள் வருவாங்கனு எதிர்பார்க்கல’’முதல்வர் பரபரKanimozhi on Marina Air show : மெரினா உயிரிழப்பு கனிமொழி பகீர் REACTION!யாரை சாடுகிறார்?Air show in Marina : பறிபோன 5 உயிர்கள்! யார் பொறுப்பு?அரசா? விமானப்படையா?Rahul Gandhi : தலித் வீட்டில் சமையல்!Cooking-ல் அசத்திய ராகுல்!நெகிழ வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாணவர்களே ரெடியா!
மாணவர்களே ரெடியா! "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயற்சி.. வந்தது அப்டேட்!
Airtel AI: ஸ்பேம் அழைப்புகளுக்கு எதிராக AI: களத்தில் இறக்கிய ஏர்டெல் நிறுவனம்.!
ஸ்பேம் அழைப்புகளுக்கு எதிராக AI: களத்தில் இறக்கிய ஏர்டெல் நிறுவனம்.!
"விவசாயிகளுக்கு சேவை செய்வது கடவுளை வணங்குவது போன்றது" உருக்கமாக பேசிய மத்திய அமைச்சர்!
பாஜகவுக்கு கேட் அவுட்.. எதிரி கட்சியுடன் கைகோர்க்கும் பரூக் அப்துல்லா.. காஷ்மீரில் காத்திருக்கும் ஷாக்
பாஜகவுக்கு கேட் அவுட்.. எதிரி கட்சியுடன் கைகோர்க்கும் பரூக் அப்துல்லா.. காஷ்மீரில் காத்திருக்கும் ஷாக்
PM Modi Song: பிரதமர் மோடி எழுதிய பாடல்: அடடே.! அற்புதமா இருக்கே.!
பிரதமர் மோடி எழுதிய பாடல்: அடடே.! அற்புதமா இருக்கே.!
பூமியைச் சுற்றும் 2வது நிலா.! நிலாவுக்கு கிடைத்த புது பிரண்டு.! வானியல் அற்புத நிகழ்வு
பூமியைச் சுற்றும் 2வது நிலா.! நிலாவுக்கு கிடைத்த புது பிரண்டு.! வானியல் அற்புத நிகழ்வு
எமனாக வந்த அரசு பேருந்து.. தாயும் மகனும் பரிதாப பலி.. கதறும் கிராம மக்கள்
எமனாக வந்த அரசு பேருந்து.. தாயும் மகனும் பரிதாப பலி.. கதறும் கிராம மக்கள்
கைரேகை வைத்து மேவாட் கொள்ளையனை தூக்கிய போலீஸ்.. தீரன் படம் பாணியில் நடந்த சம்பவம்
கைரேகை வைத்து மேவாட் கொள்ளையனை தூக்கிய போலீஸ்.. தீரன் படம் பாணியில் நடந்த சம்பவம்
Embed widget