Hardik Pandya : இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி: கேப்டன் ஹர்திக் பாண்டியாவா?
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அணியை வழிநடத்திய ஹார்திக் பாண்டியாவே இலங்கைக்கு எதிரான தொடரிலும் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 3 முதல் 15ம் தேதி வரை பல்வேறு நகரங்களில் இந்தியா டி20 போட்டிகளை நடத்தவுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அணியை வழிநடத்திய ஹார்திக் பாண்டியாவே இலங்கைக்கு எதிரான தொடரிலும் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அயர்லாந்துக்கு எதிரான தொடரில்தான் ஹார்திக் பாண்டியா கேப்டனாக அணியை முதல் முறையாக வழிநடத்தினார். அடுத்த ஆண்டு 3 டி20 தொடர், பல்வேறு ஒரு நாள் தொடர் ஆட்டங்களை இந்திய அணியும் இலங்கையும் விளையாடவுள்ளன.
வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில், வீரர்கள் நாடு திரும்பினர். இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான அணி இன்னும் அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ அறிவிக்கவில்லை.
இருப்பினும், சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு ஹார்திக் பாண்டியாவை கேப்டனாக தேர்வு செய்யும் என்று நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கு இளம் பட்டாளத்தை தேர்வுக் குழு தேர்வு செய்திருந்தது.
அதேபோல், இலங்கைக்கு எதிரான தொடரிலும் நடக்கலாம் என்று தெரிகிறது. டி20 தொடரில் இந்திய அணியை ஹார்திக் பாண்டியா வழிநடத்த அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. டி20 அணியின் அடுத்த முழுநேர கேப்டனாக அவர் பார்க்கப்படுகிறார். மேலும் 2024 டி20 உலகக் கோப்பையிலும் அவர் அணியை சிறப்பாக வழிநடத்துவார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். டி20 அணி மட்டுமல்ல, இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் ஹார்திக் பாண்டியாவே கேப்டனாக நியமிக்கப்படவும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவங்களிலும் நியமிக்கப்பட்ட துணைக் கேப்டனான கே.எல். ராகுல், 2022 இல் 16 டி20 போட்டிகளில் 434 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர் 126.53 என்ற குறைவான ஸ்ட்ரைக் ரேட்டுடன் பேட்டிங் செய்தார். டெஸ்டுகளில் அவரது குறைவான ரன்கள் தேர்வு குழுவை அதிருப்தியில் தள்ளியிருப்பதாக கூறப்படுகிறது.
David Warner: தனித்துவமான சாதனையை தனதாக்கிய டேவிட் வார்னர்.. உலகளவில் இரண்டாவது வீரர் என்ற பெருமை!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் விளையாடியபோது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. அதன்காரணமாக, அவரால் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாமல் போனது.
அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதன்காரணமாக, இலங்கைக்கு எதிரான தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படவே வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதேபோல், முன்னாள் கேப்டன் கோலி போன்ற சீனியர் வீரர்களுக்கும் இலங்கைக்கு எதிரான தொடரில் ஓய்வு கொடுக்கப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.