Indian Cricket Team New Jersey: இந்திய அணியின் புதிய ஜெர்சியில் இவ்வளவு விஷயம் இருக்கா..? சீக்ரெட்டை சோக்காக சொன்ன பிசிசிஐ!
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022க்கான இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022க்கான இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. ஜெர்சியின் முன்புறம் அஸூர் ப்ளூவின் லேசான டோன்களைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் ஸ்லீவ்கள் ராயல் ப்ளூவின் டார்க் டோன்களைக் கொண்டுள்ளது.
இந்த ஜெர்சியை ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி அணிந்து விளையாட இருக்கிறது.
இந்த நிலையில், ஜெர்சியின் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு குறியீடுக்கான விளக்கம் என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
முக்கோணம்:
இது சமபக்க முக்கோணங்களின் வடிவத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது - ஆற்றல், ஆவி மற்றும் சக்தி ஆகியவற்றின் கலவையின் உலகளாவிய சின்னம் - இது தடிமனாகவும் மெல்லியதாகவும் அணிக்கு பின்னால் நிற்கும் ரசிகர்களின் அசைக்க முடியாத ஆதரவை குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
இதழ்கள்:
BCCI லோகோவில் இருந்து ஈர்க்கப்பட்டு, அதிலிருந்த இதழ்களை அடிப்படையாக கொண்டு புதிய ஜெர்சியில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதி மற்றும் விசுவாசத்தைக் குறிக்கிறது.
நட்சத்திரங்கள்:
1983, 2007 மற்றும் 2011 ம் ஆண்டு இந்திய அணியை உலகக் கோப்பையை வென்றதற்கு சான்றாக மூன்று நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பதிவேற்றிய புகைப்படங்களில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் புகைப்படம் இருந்தது. ரேணுகா சிங் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் போன்ற மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளும் அந்த புகைப்படத்தில் இடம் பெற்றிருந்தனர்.
View this post on Instagram
நடந்து முடிந்த ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணி வெளியேறியதற்கு முக்கிய காரணமாக பந்துவீச்சே பார்க்கப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியின்போது கடைசி கட்டத்தில் இந்திய அணி பந்து வீச்சில் சொதப்பி ஆசியக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடருக்கு முன்னதாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் காயங்களில் இருந்து மீண்டுள்ளனர். இது இந்திய அணிக்கு கூடுதல் போனஸ். மேலும் ஆஸ்திரேலியா தொடருக்கு எடுக்கப்பட்ட முகமது ஷமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அவருக்கு மாற்று வீரராக உமேஷ் யாதவ் அறிவிக்கப்பட்டார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக செப்டம்பர் 20 ஆம் தேதி மொஹாலியிலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 நாக்பூர் மற்றும் ஹைதராபாத்தில் செப்டம்பர் 23 மற்றும் செப்டம்பர் 25 ஆம் தேதிகளிலும் விளையாடுகிறது.
ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார் , ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ்.