T20 WorldCup Centuries : டி20 உலகக்கோப்பையில் சதம் அடித்த வீரர்கள் யார்..? யார்..? முழு லிஸ்ட் உள்ளே..!
List of centuries: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை சதம் அடித்த வீரர்களை பற்றி கீழே விரிவாக காணலாம்.
List of centuries: ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி ஆட்டம் நவம்பர் 13ம் தேதி நடைபெறும். இந்நிலையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை சதம் அடித்த வீரர்களை பற்றி தற்போது பார்ப்போம்.
கிறிஸ் கெயில்
2007ம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த கிறிஸ் கெயில், 57 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் பத்து சிக்ஸர் அடித்து 117 ரன்கள் எடுத்தார்.
மேலும், 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த கிறிஸ் கெயில், 48 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர் அடித்து 100 ரன்கள் எடுத்தார்
சுரேஷ் ரெய்னா
2010ம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், இந்திய அணியைச் சேர்ந்த சுரேஷ் ரெய்னா 60 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர் அடித்து 101 ரன்கள் எடுத்தார்.
மகேல ஐயவர்தன
2010ம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை அணியைச் சேர்ந்த ஜெயவர்தனே 64 பந்துகளில் பத்து பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர் அடித்து 100 ரன்கள் எடுத்தார்.
பிரண்டன் மெக்கல்லம்
2012ம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காளதேசம் அணிக்கு எதிரான போட்டியில், நியூசிலாந்து அணியைச் சேர்ந்த பிரண்டன் மெக்கல்லம் 58 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர் அடித்து 123 ரன்கள் எடுத்தார்.
அலெக்ஸ் ஹேல்ஸ்
2014ம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில், இங்கிலாந்து அணியைச் சேர்ந்த அலெக்ஸ் ஹேல்ஸ் 64 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர் அடித்து 116 ரன்கள் எடுத்தார்.
அகமது செசாத்
2014ம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த அகமது ஷேசாத் 62 பந்துகளில் பத்து பவுன்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர் அடித்து 111 ரன்கள் எடுத்தார்.
தமீம் இக்பால்
2016ம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓமன் அணிக்கு எதிரான போட்டியில், வங்காளதேசத்தைச் சேர்ந்த தமீம் இக்பால் 63 பந்துகளில் பத்து பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர் அடித்து 103 ரன்கள் எடுத்தார்.
ஜோஸ் பட்லர்
2021ம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில், இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஜோஸ் பட்லர் 67 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர் அடித்து 101 ரன்கள் எடுத்தார்.
ரைலீ ரூசோ
தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில், தென் ஆப்பிரிக்க அணியைச் சேர்ந்த ரைலீ ரூசோ 56 பந்துகளில் ஏழு பவுன்டிரிகள் மற்றும் எட்டு சிக்ஸர் அடித்து 109 ரன்கள் எடுத்தார்.
கிளென் பிலிப்ஸ்
உலககோப்பையில் இன்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில், நியூசிலாந்து அணியைச் சேர்ந்த கிளென் பிலீப்ஸ் 64 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் பத்து சிக்ஸர் அடித்து 104 ரன்கள் எடுத்தார்.