மேலும் அறிய

ரோஹித், விராட் இடத்தை நிரப்பும் திறமை யாருக்கு உள்ளது..? இந்திய அணியில் இடத்திற்காக தவிக்கும் இளம் வீரர்கள்!

ரோஹித், கோலி ஓய்வுக்கு பிறகு இந்திய டி20 அணியில் இவர்கள் இடத்தை யார் பிடிக்க போகிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.. 

ஐபிஎல் 2024 போட்டிகளுக்கு முன்பு வரை, 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி விளையாடுவாரா என்ற கேள்வி வலம் வந்தது. அதன்பிறகு, ஐபிஎல் 2024ல் சிறப்பாக விளையாடிய விராட் கோலி அதிக ரன்கள் எடுத்தவருக்கான ஆரஞ்சு கோப்பையை வென்று, உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்தார். 

ஐபிஎல் 2024 சீசனை போன்று 2024 டி20 உலகக் கோப்பையிலும் கெத்து காட்டுவார் என்ற எதிர்பார்க்கப்பட்ட கோலி, அரையிறுதி போட்டி வரை சொற்ப ரன்களில் மட்டுமே அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதுகுறித்து, ரோஹித் சர்மாவிடம் கேட்டபோது கூட, விராட் கோலி ஒரு கிளாஸ் பெயர். அவர் இறுதிப்போட்டிக்காக கூட தனது ஆட்டத்திறனை சேமித்து வைத்திருக்கலாம் என தெரிவித்தார். 

அதற்கு ஏற்றாற்போல் விராட் கோலியும் நேற்றைய தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 76 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு கோப்பையை வெல்ல உதவினார். 

ரோஹித் சர்மாவும் 2024 டி20 உலகக் கோப்பையில் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி, எதிரணி வீரர்களை திணற வைத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சூப்பர் 8ல் 92 ரன்களும், இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 57 ரன்களும் எடுத்து அசத்தினார். 

மேலும், டி20  உலகக் கோப்பை  மட்டுமின்றி சர்வதேச டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா, விராட் கோலி அதிக ரன்கள் எடுத்துள்ளனர். அதன்படி, ரோஹித் சர்மா 4231 ரன்கள் எடுத்து சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 4188 ரன்களுடன் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். 

இப்படியான ஜாம்பவான்கள் நேற்று டி20 உலகக் கோப்பையில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்கள். கடந்த 2022 டி20 உலகக் கோப்பைக்கு பிறகு ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் பெரிதாக இந்திய அணிக்காக டி20 உலகக் கோப்பையில் விளையாடவில்லை. இந்தநிலையில், ரோஹித், கோலி ஓய்வுக்கு பிறகு இந்திய டி20 அணியில் இவர்கள் இடத்தை யார் பிடிக்க போகிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.. 

தொடக்க வீரர் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக தொடக்க வீரர்களாக யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கலாம். தொடர்ந்து, மூன்றாவது இடத்தில் இஷான் கிஷன், ரிங்கு சிங், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவலாம். 

இவர்களில் எத்தனை பேர் இருந்தாலும், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரது ஆட்டத்திறன் மற்றும் அனுபவத்தை மற்ற வீரர்களால் நிரப்ப முடியாது. 

விராட் கோலியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை: 

டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் சிறப்பானதாகவே இருந்தது. விராட் கோலி 14 ஆண்டுகளாக இந்திய அணிக்காக டி20 சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். கடந்த 2010ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 போட்டியில் விராட் கோலி அறமுகமானார். இதற்குப் பிறகு, கோலி இந்தியாவுக்காக மொத்தம் 125 போட்டிகளில் களமிறங்கி 137.04 ஸ்ட்ரைக் ரேட்டில் 4188 ரன்கள் எடுத்தார். இதில், 38 அரைசதம் மற்றும் 1 சதத்தையும் அடித்தார்.

ரோஹித் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை: 

2007 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் எம்எஸ் தோனியின் தலைமையின் கீழ் ரோஹித் சர்மா அறிமுகமானார். இதுவரை இந்திய அணிக்காக 159 போட்டிகளில் விளையாடி 4231 ரன்கள் எடுத்துள்ளார்.  இதில், 32 அரைசதங்களும், 5 சதங்களும் அடங்கும். இதுவரை இந்திய அணிக்காக 62 டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்த ரோஹித், 50 வெற்றிகளையும், 12 தோல்விகளையும் பெற்று கொடுத்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Ben Duckett: பென் டக்கெட்டிற்கு ஐபிஎல் விளையாட 2 ஆண்டுகள் தடை! ஏன் தெரியுமா?
Ben Duckett: பென் டக்கெட்டிற்கு ஐபிஎல் விளையாட 2 ஆண்டுகள் தடை! ஏன் தெரியுமா?
PAK PSL:
PAK PSL: "பாகிஸ்தானுக்கு வராதீர்கள்!" ! சர்வதேச வீரர்களை அதிர வைத்த பயங்கரவாத குழுவின் எச்சரிக்கை
ஆசியக் கோப்பை பாணியில்
ஆசியக் கோப்பை பாணியில் "யூரோ நேஷன்ஸ் கோப்பை"! திட்டத்துடன் களமிறங்கிய அயர்லாந்து
Nathan Ellis : ஐபிஎல் 2026! CSK-க்கு அதிர்ச்சி! பத்திரனா இல்லை... இப்போது எல்லிஸும் இல்லை.. சிக்கலில் மஞ்சள் படை
Nathan Ellis : ஐபிஎல் 2026! CSK-க்கு அதிர்ச்சி! பத்திரனா இல்லை... இப்போது எல்லிஸும் இல்லை.. சிக்கலில் மஞ்சள் படை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: கமலால் கடுப்பான விசிக தொண்டர்கள்..! நள்ளிரவில் நன்றி சொல்லி திருமா போஸ்ட் - என்ன ஆச்சு?
Thirumavalavan: கமலால் கடுப்பான விசிக தொண்டர்கள்..! நள்ளிரவில் நன்றி சொல்லி திருமா போஸ்ட் - என்ன ஆச்சு?
Sonia Gandhi: சோனியா காந்தி நள்ளிரவில் மருத்துவமனையில் திடீர் அனுமதி! என்னாச்சு?
Sonia Gandhi: சோனியா காந்தி நள்ளிரவில் மருத்துவமனையில் திடீர் அனுமதி! என்னாச்சு?
RCB Sold: ஆர்சிபி அணி ரூ.16 ஆயிரம் கோடிக்கு விற்பனை- கோலியின் புதிய இந்திய ஓனர் யார் தெரியுமா? - முழு விவரம்
RCB Sold: ஆர்சிபி அணி ரூ.16 ஆயிரம் கோடிக்கு விற்பனை- கோலியின் புதிய இந்திய ஓனர் யார் தெரியுமா? - முழு விவரம்
MK Stalin on Kamal Haasan: ” கமல் செய்தது தியாகம்” திமுக ஆதரவு அறிவித்த பின் முதல்வரின் உருக்கமான வார்த்தைகள்
MK Stalin on Kamal Haasan: ” கமல் செய்தது தியாகம்” திமுக ஆதரவு அறிவித்த பின் முதல்வரின் உருக்கமான வார்த்தைகள்
MNM quits Election 2026: தொண்டர்களுக்காக தேர்தலில் போட்டியில்லை.. ஆனால் கூட்டணி தர்மம்? ட்விஸ்ட் வைத்த கமல்
MNM quits Election 2026: தொண்டர்களுக்காக தேர்தலில் போட்டியில்லை.. ஆனால் கூட்டணி தர்மம்? ட்விஸ்ட் வைத்த கமல்
DMK DMDK Seat Sharing: திமுக - தேமுதிக இடையே கையெழுத்தான தொகுதி உடன்பாடு; எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு.?
திமுக - தேமுதிக இடையே கையெழுத்தான தொகுதி உடன்பாடு; எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு.?
AIADMK Election Manifesto: மகளிருக்கு ஃப்ரிட்ஜ் இலவசம், மதுவிலக்கு... அதிமுக இறுதி தேர்தல் அறிக்கை- இதோ 297 அறிவிப்புகள்
AIADMK Election Manifesto: மகளிருக்கு ஃப்ரிட்ஜ் இலவசம், மதுவிலக்கு... அதிமுக இறுதி தேர்தல் அறிக்கை- இதோ 297 அறிவிப்புகள்
US Iran War Trump Modi: மத்திய கிழக்கு போர், ஹார்முஸ் பிரச்னை; பிரதமர் மோடியுடன் பேசிய ட்ரம்ப்; இருவரும் விவாதித்தது என்ன.?
மத்திய கிழக்கு போர், ஹார்முஸ் பிரச்னை; பிரதமர் மோடியுடன் பேசிய ட்ரம்ப்; இருவரும் விவாதித்தது என்ன.?
Embed widget