T20 World Cup 2024: 5 போட்டிகளில் 5லிலும் வெற்றி.. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற நமீபியா!
ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் குவாலிஃபையர் போட்டியில் இருந்து 2024 டி20 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற முதல் அணி என்ற பெருமையை நமீபியா பெற்றது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு நமீபியா அணி தகுதிபெற்றது. இதன்மூலம், ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் குவாலிஃபையர் போட்டியில் இருந்து 2024 டி20 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற முதல் அணி என்ற பெருமையை நமீபியா பெற்றது.
தகுதிசுற்றில் நமீபியா அணி 5 போட்டிகளில் விளையாடி 5லிலும் வெற்றிபெற்றுள்ளது. இதையடுத்து, நமீபியாவுடன் டி20 உலகக் கோப்பையில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மீதமுள்ள ஒரு இடத்திற்கு ஜிம்பாப்வே, கென்யா, உகாண்டா ஆகிய நாடுகள் போட்டியிடுகின்றன.
ரிச்சர்ட் எராஸ்மஸ் தலைமையிலான நமீபிய அணி உலகக் கோப்பைக்கு தகுதி சுற்றில் சிறப்பாக செயல்பட்டது. தாங்கள் விளையாடிய தகுதிச் சுற்று இறுதி ஆட்டத்தில் நமீபியா 58 ரன்கள் வித்தியாசத்தில் தான்சானியாவை வீழ்த்தி டி20 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றது.
Teams qualified into T20 World Cup 2024 so far:
— Johns. (@CricCrazyJohns) November 28, 2023
West Indies, USA, Australia, England, India, Netherlands, New Zealand, Pakistan, South Africa, Sri Lanka, Afghanistan, Bangladesh, Ireland, Scotland, Papua New Guinea, Canada, Nepal, Oman, Namibia. pic.twitter.com/l8fqGAFNqz
போட்டி சுருக்கம்:
டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் தான்சானியா அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில், முதல் பேட்டிங் செய்த நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. நமீபியா அணியில் அதிகபட்சமாக ஜேஜே ஸ்மித் 25 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 160 ஸ்டிரைக் ரேட்டில் ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் எடுத்தார்.
158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தான்சானியா அணி 99 ரன்களுக்குள் சுருண்டது. இதனால் நமீபியா 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலகக் கோப்பை 2024க்குள் அடியெடுத்து வைத்தது.
2024 டி20 உலகக் கோப்பைக்கு எந்த 19 அணிகள் தகுதி பெற்றன?
2024 டி20 உலகக் கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளும் நடத்துவதால் இரு அணிகளும் நேரடியாக தகுதிபெற்றன. இதுபோக, புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா என மொத்தமாக 19 அணிகள் தகுதிபெற்றுள்ளன.
Namibia are heading to their third consecutive #T20WorldCup! 🇳🇦
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 28, 2023
Victory against Tanzania made it five wins from five at the Africa Qualifier and seals their spot at next year's tournament 👏 pic.twitter.com/yb2UxEMtl2
தகுதிச்சுற்றில் நமீபியா கடந்து வந்த பாதை:
முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் யுங்காடா அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைய செய்தது. மூன்றாவது போட்டியில் ருவாண்டா அணி 68 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 4வது போட்டியில் கென்யாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஐந்தாவது மற்றும் கடைசி ஆட்டத்தில் தான்சானியா 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைய செய்தது.