மேலும் அறிய

Virat Kohli: T20 என்றால் அலர்ஜியா? சொதப்பும் விராட் கோலி.. 4 போட்டியில் எடுத்த ரன் இவ்வளவுதானா! ஏமாற்றத்தில் ரசிகர்கள்

டி20 போட்டிகளில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

டி20 உலகக் கோப்பை 2024:

ஐசிசி டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றில் விளையாடி வருகின்றன. முன்னதாக இந்த டி20 போட்டிகளில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தொடர்ந்து சொதப்புவது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.

சொதப்பும் விராட் கோலி:

அதாவது இந்திய அணி டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி அயர்லாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆனாலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 5 பந்துகள் களத்தில் நின்று வெறும் 1 ரன் மட்டுமே எடுத்தார்.  

அதேபோல் இந்திய அணி தங்களது இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு விளையாடியது. முதல் போட்டியில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி இந்த போட்டியிலாவது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் காத்திருந்தானர். ஆனால் நடந்து என்னவோ அதற்கு மாறாக. விராட் கோலி சந்தித்தது வெறும் 3 பந்துகள் மட்டும் தான். ஒரு பவுண்டரி மட்டும் அடித்து 4 ரன்களில் நஷீம் ஷா பந்தில் உஸ்மான் கானிடம் கேட்சை கொடுத்து நடையைக்கட்டினார்.

தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணியை எதிர்கொண்டது இந்தியா. இந்த போட்டியிலும் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோஹித் ஷர்மா 3 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க விராட்  கோலி டக் அவுட் ஆகி வெளியேறினார். இவர்கள் இரவரையும் வீழ்த்திய அமெரிக்க அணியின் பந்து வீச்சாளர் நெட்ராவல்கர். இவர் இந்திய 19 வயதிற்குட்பட்ட உலகக் கோப்பை போட்டியில் விளையாடியவர். 4 லீக் போட்டிகளில் கனடா அணிக்கு எதிரான போட்டி மட்டும் மழையால் நடைபெறவில்லை.

ரசிகர்கள் ஏமாற்றம்:

இந்நிலையில் தான் கடந்த ஜூன் 20-ஆம் தேதி சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொண்டது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலியோ 24 பந்துகள் களத்தில் நின்று 24 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இப்படி தொடர்ந்து கோலி டி20 போட்டிகளில் சொதப்புவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. அதேநேரம் 2023 ஒரு நாள் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் (765 )எடுத்த வீரர் ஐபிஎல் போட்டியின் 17வது சீசனில் அதிக ரன்கள் (741) எடுத்த வீரராக விராட் கோலி இருக்கிறார்.

விராட் கோலி சர்வதேச அளவில் இதுவரை 121 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் 4066 ரன்கள் எடுத்துள்ள அவர் அதிகபட்சமாக 122 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: AUS vs BAN: வங்கதேசத்தை சூப்பர் 8ல் சிதைத்த ஆஸ்திரேலியா.. 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தல்!

மேலும் படிக்க: Fact Check: விரைவில் சானியா மிர்சா - முகமது ஷமி திருமணமா..? சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்ணாமலைக்கு முட்டுக்கட்டை போட்ட பாஜக மேலிடம்.. தள்ளிப்போகும் DMK Files-3?
அண்ணாமலைக்கு முட்டுக்கட்டை போட்ட பாஜக மேலிடம்.. தள்ளிப்போகும் DMK Files-3?
ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா பூ கொடுத்த ராகுல் காந்தி.. குலுங்கி குலுங்கி சிரித்த ஜோதிமணி!
ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா பூ கொடுத்த ராகுல் காந்தி.. குலுங்கி குலுங்கி சிரித்த ஜோதிமணி!
Karthigai Deepam 2024: தீபம் ஏற்றும் நேரம் ? எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம் ? எந்த திசையில் ஏற்றலாம் ?
தீபம் ஏற்றும் நேரம் ? எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம் ? எந்த திசையில் ஏற்றலாம் ?
மைக்கை பிடுங்கி பத்திரிகையாளரை தாக்கிய ரஜினியின் நெருங்கிய நண்பர்! - மன்னிப்பு கோரிய பிரபல நடிகர்! என்ன நடந்தது! 
மைக்கை பிடுங்கி பத்திரிகையாளரை தாக்கிய ரஜினியின் நெருங்கிய நண்பர்! - மன்னிப்பு கோரிய பிரபல நடிகர்! என்ன நடந்தது! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்ணாமலைக்கு முட்டுக்கட்டை போட்ட பாஜக மேலிடம்.. தள்ளிப்போகும் DMK Files-3?
அண்ணாமலைக்கு முட்டுக்கட்டை போட்ட பாஜக மேலிடம்.. தள்ளிப்போகும் DMK Files-3?
ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா பூ கொடுத்த ராகுல் காந்தி.. குலுங்கி குலுங்கி சிரித்த ஜோதிமணி!
ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா பூ கொடுத்த ராகுல் காந்தி.. குலுங்கி குலுங்கி சிரித்த ஜோதிமணி!
Karthigai Deepam 2024: தீபம் ஏற்றும் நேரம் ? எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம் ? எந்த திசையில் ஏற்றலாம் ?
தீபம் ஏற்றும் நேரம் ? எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம் ? எந்த திசையில் ஏற்றலாம் ?
மைக்கை பிடுங்கி பத்திரிகையாளரை தாக்கிய ரஜினியின் நெருங்கிய நண்பர்! - மன்னிப்பு கோரிய பிரபல நடிகர்! என்ன நடந்தது! 
மைக்கை பிடுங்கி பத்திரிகையாளரை தாக்கிய ரஜினியின் நெருங்கிய நண்பர்! - மன்னிப்பு கோரிய பிரபல நடிகர்! என்ன நடந்தது! 
25 பேருந்து நிலையங்கள்; 116 கார்பார்க்கிங்: திருவண்ணாமலை கிரிவலப்பாதைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இதோ!
25 பேருந்து நிலையங்கள்; 116 கார்பார்க்கிங்: திருவண்ணாமலை கிரிவலப்பாதைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இதோ!
School Leave: மாணவர்களே..!  ரெட் அலெர்ட் - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அதிரடி அறிவிப்பு
School Leave: மாணவர்களே..! ரெட் அலெர்ட் - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அதிரடி அறிவிப்பு
விவசாயிகள் கவனத்திற்கு... நெற்பயிரில் பூச்சி தாக்குதல்: கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
விவசாயிகள் கவனத்திற்கு... நெற்பயிரில் பூச்சி தாக்குதல்: கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
Paracetamol: என்னயா சொல்றீங்க..! ”பாராசிட்டமால் தரமானதாக இல்லையா” மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி
Paracetamol: என்னயா சொல்றீங்க..! ”பாராசிட்டமால் தரமானதாக இல்லையா” மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி
Embed widget