AUS vs BAN: வங்கதேசத்தை சூப்பர் 8ல் சிதைத்த ஆஸ்திரேலியா.. 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தல்!
டி20 உலகக் கோப்பை 2024ன் 44வது போட்டியில் ஆஸ்திரேலியா டக்வொர்த் லூயிஸ் முறையின் கீழ் 28 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
டி20 உலகக் கோப்பை 2024ன் 44வது போட்டியில் ஆஸ்திரேலியா டக்வொர்த் லூயிஸ் முறையின் கீழ் 28 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. சூப்பட்ர் 8 சுற்றில் இரு அனிகளும் மோதிய முதல் போட்டி இதுவாகும். போட்டி தொடங்கியது முதலே மழை, அடிக்கடி வந்து ஆட்டத்தை தொந்தரவு செய்தது.
வங்கதேச இன்னிங்ஸ்:
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷாண்டோ 36 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 41 ரன்கள் எடுத்திருந்தது.
ஆஸ்திரேலிய அணியின் அதிகபட்சமாக பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்களும், ஜாம்பா 2 விக்கெட்களும் வீழ்த்தியிருந்தனர். இது தவிர மிட்செல் ஸ்டார்க், ஸ்டொய்னிஸ் மற்றும் மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட்டை எடுத்திருந்தனர்.
இப்போட்டியில், வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவுக்காக ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். பிரட் லீக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த இரண்டாவது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
Hat-trick by Pat cummins against Bangladesh
— Ctrl C Ctrl Memes (@Ctrlmemes_) June 21, 2024
🐍 🐍 🐍 #BanvsAus #AusvsBanpic.twitter.com/nqlQT8SqsA
ஆஸ்திரேலிய வெற்றி:
141 ரன்கள் இலக்கை துரத்த ஆஸ்திரேலிய இன்னிங்ஸின்போது இரண்டு முறை மழை பெய்தது. ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 7வது ஓவரில் மழை குறுக்கிட்டது. அப்போது ஆஸ்திரேலிய அணி 6.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் எடுத்தது. ஆனால் சிறிது நேரம் கழித்து ஆட்டம் தொடங்கியது.
12வது ஓவரின் போது இரண்டாவது மழை பெய்தது. அப்போது ஆஸ்திரேலிய அணிக்காக டேவிட் வோர்னர் 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 53* ரன்களையும், கிளென் மேக்ஸ்வெல் 6 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உதவியுடன் 14* ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். தொடர்ந்து மழை பெய்து வந்ததால், டிஆர்எஸ் கீழ் ஆஸ்திரேலியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேகமாக ரன்களை குவித்த ஆஸ்திரேலியா:
141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 11.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் குவித்தது. மழை மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால் ஆஸ்திரேலிய அணி எளிதாக வெற்றி பெற்றிருக்கும்.
வங்கதேச சுழற்பந்து வீச்சாளர் ரிஷாத் ஹுசைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரிஷாத், டிராவிஸ் ஹெட் மற்றும் கேப்டன் மிட்செல் மார்ஷ் ஆகியோரது விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.