மேலும் அறிய

T20 World Cup 2022: இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இவங்கதான் கலக்கப்போறாங்க.. ஐசிசி வெளியிட்ட லிஸ்ட்...

டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி தொடங்குகிறது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 16ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் வரும் அக்டோபர் 23ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுகிறது. 

இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பையில் கலக்கவிருக்கும் 5 வீரர்கள் தொடர்பாக ஐசிசி ஒரு பட்டியை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார் யார்?

டேவிட் வார்னர்:

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர். கடந்த டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தார். 3 அரைசதங்கள் உட்பட 289 ரன்கள் விளாசி அசத்தினார். இதனால் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்று அசத்தியது. அதேபோல் இம்முறையும் அவர் டி20 உலகக் கோப்பை தொடரில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வணிந்து ஹசரங்கா:

2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் 16 விக்கெட் வீழ்த்தி ஹசரங்கா அசத்தினார். அத்துடன் தற்போது நிறைவு பெற்ற ஆசிய கோப்பை தொடரிலும் இலங்கை அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். அந்த ஃபார்ம் உடன் வரும் டி20 உலகக் கோப்பை தொடரிலும் இவர் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவிலுள்ள பெரிய மைதானங்கள் இவருடைய சுழற்பந்து வீச்சிற்கு கை கொடுக்கும் என்று கருதப்படுகிறது. 

ஜோஸ் பட்லர்:

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். கடந்த ஐபிஎல் தொடரில் 4 சதம் விளாசி அசத்தினார். அத்துடன் 2021 டி20 உலகக் கோப்பை தொடரில் சதம் அடித்த ஒரே வீரர் இவர் தான். ஆகவே காயத்திலிருந்து மீண்டு வரும் பட்லர் டி20 உலகக் கோப்பையில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சூர்யகுமார் யாதவ்:

இந்தாண்டு டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரராக சூர்யகுமார் யாதவ் வலம் வருகிறார். அத்துடன் இந்தாண்டு டி20 போட்டிகளில் அதிக சிக்சர் விளாசிய வீரர் என்ற சாதனையையும் இவர் தன் வசம் வைத்துள்ளார். அசத்தலான ஃபார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் வரும் டி20 உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்டு மேலும் ரன்களை சேர்த்து இந்திய அணிக்கு பெரிய பலமாக இருப்பார் என்று கருதப்படுகிறது. 

முகமது ரிஸ்வான்:

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் டி20 தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். கடந்த டி20 உலகக் கோப்பையில் அசத்திய ரிஸ்வான், ஆசிய கோப்பையிலும் சிறப்பாக பேட்டிங் செய்தார். 2021 டி20 உலகக் கோப்பை தொடரில் 281 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடம்பிடித்து அசத்தினார். ஆகவே இந்த டி20 உலகக் கோப்பையிலும் அதிக ரன்கள் எடுத்து கலக்குவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

மேலும் படிக்க:தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைக்குமா இந்தியா? இன்று கடைசி டி20 போட்டி..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND Vs Nz Final: ஐசிசியின் 6வது கோப்பை கிடைக்குமா? ஃபைனலில் இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை - ரோகித் சாதிப்பாரா?
IND Vs Nz Final: ஐசிசியின் 6வது கோப்பை கிடைக்குமா? ஃபைனலில் இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை - ரோகித் சாதிப்பாரா?
Ilayaraja Symphony: ராஜா ராஜா தான்..! இசைவெள்ளம், சிம்பொனியை அரங்கேற்றிய இளையராஜா - வீடியோ வைரல்
Ilayaraja Symphony: ராஜா ராஜா தான்..! இசைவெள்ளம், சிம்பொனியை அரங்கேற்றிய இளையராஜா - வீடியோ வைரல்
PM MODI: மோடி தேடி தேடி பிடித்த சி.எம்., இப்படி செய்யலாமா? சொன்னதை காதில் வாங்காமல் போட்ட அதிரடி உத்தரவு
PM MODI: மோடி தேடி தேடி பிடித்த சி.எம்., இப்படி செய்யலாமா? சொன்னதை காதில் வாங்காமல் போட்ட அதிரடி உத்தரவு
‘இது ரொம்ப தப்பு’ - ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப்புக்கு நோட்டீஸ்!
‘இது ரொம்ப தப்பு’ - ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப்புக்கு நோட்டீஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

வார்த்தையை விட்ட அண்ணாமலை! அதிருப்தியில் EPS! குழப்பத்தில் பாஜக சீனியர்கள்Rajendra Balaji Vs Mafoi Pandiarajan | மிரட்டிய ராஜேந்திர பாலாஜி!EPS-யிடம் போட்டு கொடுத்த மாஃபா தூதுவிடும் தவெக!Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs Nz Final: ஐசிசியின் 6வது கோப்பை கிடைக்குமா? ஃபைனலில் இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை - ரோகித் சாதிப்பாரா?
IND Vs Nz Final: ஐசிசியின் 6வது கோப்பை கிடைக்குமா? ஃபைனலில் இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை - ரோகித் சாதிப்பாரா?
Ilayaraja Symphony: ராஜா ராஜா தான்..! இசைவெள்ளம், சிம்பொனியை அரங்கேற்றிய இளையராஜா - வீடியோ வைரல்
Ilayaraja Symphony: ராஜா ராஜா தான்..! இசைவெள்ளம், சிம்பொனியை அரங்கேற்றிய இளையராஜா - வீடியோ வைரல்
PM MODI: மோடி தேடி தேடி பிடித்த சி.எம்., இப்படி செய்யலாமா? சொன்னதை காதில் வாங்காமல் போட்ட அதிரடி உத்தரவு
PM MODI: மோடி தேடி தேடி பிடித்த சி.எம்., இப்படி செய்யலாமா? சொன்னதை காதில் வாங்காமல் போட்ட அதிரடி உத்தரவு
‘இது ரொம்ப தப்பு’ - ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப்புக்கு நோட்டீஸ்!
‘இது ரொம்ப தப்பு’ - ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப்புக்கு நோட்டீஸ்!
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
"அய்யோ மாட்டிக்கிட்டோமே" சோதனை செய்த போலீஸ்.. வசமாக சிக்கிய கடத்தல்காரர்.. கடைசியில் ட்விஸ்ட்
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
Embed widget