மேலும் அறிய

IND vs SA 3rd T20: தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைக்குமா இந்தியா? இன்று கடைசி டி20 போட்டி..

தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று இந்தோரில் நடைபெற உள்ளது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தச் சூழலில் இன்று மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நடைபெற உள்ளது. 

இந்நிலையில் இந்தப் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று கருதப்படுகிறது. இதன்காரணமாக மாற்று வீரர்கள் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது. அதன்படி ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷபாஸ் அகமது ஆகியோர் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 

இன்றைய போட்டி நடைபெறும் இந்தோர் ஹோல்கர் மைதானத்தில் இந்திய அணி இதுவரை ஒரு முறை கூட தோல்வி அடையவில்லை. இந்த மைதானத்தில் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக இரண்டு டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. அவற்றில் இரண்டு முறையும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த மைதானம் சிறிய மைதானம் என்பதால் இங்கு ரன்கள் அதிகமாக பதிவாகும் வாய்ப்புகள் உள்ளன.

தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தவரை அந்த அணி வெற்றியுடன் தொடரை முடிக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. இந்திய அணி இந்தப் போட்டியை வென்று ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் உள்ளது. ஆகவே அதை தடுக்க தென்னாப்பிரிக்கா அணி தீவிரமாக முயற்சி செய்யும் என்று கருதப்படுகிறது. டேவிட் மில்லர் மற்றும் குயிண்டன் டி காக் ஃபார்மிற்கு திரும்பியுள்ளது அந்த அணிக்கு பலமாக உள்ளது. 

தென்னாபிரிக்கா டி20 தொடருக்கு பிறகு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வரும் அக்டோபர் 6ஆம் தேதி ஆஸ்திரேலிய கிளம்ப உள்ளது. இதன்காரணமாக அந்த அணியில் இடம்பெற்ற வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. 

இந்திய அணி: ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ராஜட் பட்டிதார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், அவேஷ் கான், முகமது சிராஜ், தீபக் சாஹர்

தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர்:

அக்டோபர் 6- முதல் ஒருநாள் போட்டி

அக்டோபர் 9- இரண்டாவது ஒருநாள் போட்டி

அக்டோபர் 11- மூன்றாவது ஒருநாள் போட்டி

இந்த ஒருநாள் தொடருக்கு பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி 2 பயிற்சி போட்டிகளில் பங்கேற்க உள்ளது. அதன்பின்னர் அக்டோபர் 23ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget