T20 World cup 2022: டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்த இரண்டு அணிகள் விளையாடும்- ரிக்கி பாண்டிங்
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு வரும் அணிகள் தொடர்பாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இது தொடர்பான ஐசிசி பல்வேறு ப்ரோமோசன்களை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடம் கருத்துகளை கேட்டு வருகிறது.
இந்நிலையில் ஐசிசி ரிவ்யூ என்ற பெயரில் ஒரு பேட்டி எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பங்கேற்று தன்னுடைய கருத்துகளை தெரிவித்துள்ளார். அதன்படி, “ஐசிசி கோப்பைகளை வெல்ல சில நேரங்களில் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இறுதிப் போட்டிக்கு செல்லும். அதில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வெல்லும்.
இம்முறை டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமான ஒன்றாக அமையும் என்று கருதுகிறேன். கடந்த டி20 உலகக் கோப்பை யுஏஇ-யில் நடந்த போது ஆஸ்திரேலிய அணிக்கு வாய்ப்பு இருக்காது என்று கருதினேன். ஆனால் அவர்கள் எப்படியோ சிறப்பாக விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
The Australian legend has made some big calls on the #T20WorldCup, and explained what could hold Pakistan back from ultimate success ⬇️
— ICC (@ICC) July 26, 2022
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு போட்டியாக இம்முறை இங்கிலாந்து அணி இருக்கும் என்று கருதுகிறேன். இங்கிலாந்து அணி தற்போது சிறப்பான வீரர்கள் கொண்டுள்ளது. அத்துடன் மெக்கலம் பயிற்சியாளராக உள்ளார். ஆகவே இந்த மூன்று அணிகளும் சிறப்பான வீரர்கள் உள்ளனர். இவர்கள் தவிர பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நல்ல விளையாடினால் இறுதிப் போட்டிக்கு வரும் தகுதியை பெறும் என்று கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நவம்பர் மாதம் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக இருக்கும் என்று சிலர் கருதி வருகின்றனர். இந்தச் சூழலில் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்த கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்