Ind vs Nz, T20 WC: ‛நமீபியா, ஸ்காட்லாந்திடம் தோற்கும் முன் இந்தியா வெளியேற வேண்டும்’ -சரத்குமார் காட்டம்!
‛மற்றவர்கள் அனைவரும் தங்கள் நாட்டுக்காக விளையாடுகின்றனர். டி20 ஆட்டத்தை நன்றாகத் தெரிந்து வைத்துள்ளது போல் தெரிகிறது. நமது ஆட்கள் ஐபிஎல் ஆடட்டும்’
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நேற்று நியூசிலாந்துடன் விளையாடியது. இதில் இந்தியாவை நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஏற்கனவே பாகிஸ்தான் அணியுடனான முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்தியா தற்போது நியூசிலாந்துடனும் தோல்வியடைந்ததால் ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை பறிகொடுத்திருக்கிறது.
இதன் காரணமாக ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் அணியை கடுமையாக விமர்சித்துவருகின்றனர். மேலும், ஐபிஎல்லுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பிசிசிஐயோ, இந்திய வீரர்களோ உலகக் கோப்பை மாதிரியான தொடருக்கு அளிக்க மறுக்கிறார்கள் எனவும் காட்டமாக தெரிவித்துவருகின்றனர். அதுமட்டுமின்றி #Banipl என்ற ஹேஷ்டேக்கிலும் நெட்டிசன்கள் பதிவுகளை வெளியிட்டனர்.
Substandard Shameful irresponsible performance of our team, they should pull out before we get humiliated by Namibia,Scotland and Afghanistan, others are playing for their country and seem to have studied T 20 game better,let our boys play IPL #T20WorldCup21 #IndiaVsNewZealand
— R Sarath Kumar (@realsarathkumar) October 31, 2021
இந்நிலையில், நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாரும் இந்திய கிரிக்கெட் அணியை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது அணியின் அவமானகரமான, இரண்டாம் தர, பொறுப்பற்ற ஒரு ஆட்டம். நமீபியா, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளால் நாம் அவமானப்படுத்தப்படும் முன் அவர்கள் வெளியேறிவிட வேண்டும். மற்றவர்கள் அனைவரும் தங்கள் நாட்டுக்காக விளையாடுகின்றனர். டி20 ஆட்டத்தை நன்றாகத் தெரிந்து வைத்துள்ளது போல் தெரிகிறது. நமது ஆட்கள் ஐபிஎல் ஆடட்டும்" என பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Virat Kohli and BCCI | முடிவெடுப்பதில் தடுமாறும் கோலி...! மூன்று ஐ.சி.சி தோல்விகளும் உணர்த்தப்படும் உண்மையும்!
T20 World Cup 2021: இந்தியான்னாலே அடிப்போம்.. புதிய சாதனை படைத்த நியூசிலாந்து..!