T20 World Cup 2007: இந்திய அணி பாகிஸ்தானை பாஞ்சு மேஞ்ச நாள்.. உலகக் கோப்பையை முத்தமிட்டு இன்றுடன் 15 ஆண்டுகள்!
இந்திய அணியின் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் போன்ற முக்கிய வீரர்களின் பெயர்கள் 2007 டி20 உலகக் கோப்பை தொடரில் இடம்பெறவில்லை.
2007 ஒருநாள் உலககோப்பை தோல்விக்கு பிறகு டிராவிட் இந்திய அணியின் கேப்டன்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த பிறகு, யுவராஜ்சிங்தான் கேப்டனாக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் தோனி கேப்டனாக்கப்பட்டார்.
அதன்பிறகு, டி20 உலகக் கோப்பை தொடருக்காக தோனி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணி அறிவிக்கப்பட்டபோது கடும் விமர்சனமானது. இந்திய அணியின் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் போன்ற முக்கிய வீரர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.
இதன் காரணமாக இந்திய ரசிகர்கள் முதல் வெளிநாட்டு விமர்சகர்கள் வரை பெரும்பாலானோர் இந்த இந்திய இளம்படை லீக் சுற்றுகள் கூட தாண்டாது. 2007 ஒருநாள் உலகக் கோப்பை போலவே இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் சொதப்பும் என்று கருத்து பரவியது.
பாகிஸ்தானை பந்தில் பதம் பார்த்த இந்திய அணி:
இதைஎதையும் கண்டுகொள்ளாமல் இந்திய அணி, முதல் போட்டியிலேயே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதுவரை உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றதில்லை. ஆனால், இந்த போட்டியில் பாகிஸ்தானிடம் இந்திய அணி பலம் வாய்ந்த பாகிஸ்தானிடம் தோற்றுவிடும் என்ற கருத்தும் பரவியது. ஆனால் அதற்கு எதிர்மாறாக நடந்தது.
India vs Pakistan played out a thrilling tie in a group clash in Durban at the T20 World Cup 2007. For the only time in ICC event, a bowl-out was used to determine the winner. Watch it in full here.#INDvsPAK #T20WorldCup #CricketTwitter pic.twitter.com/h85oKoHXVo
— Praveen 🇮🇳 (@PraveenSarraf_) September 17, 2022
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. கௌதம் கம்பீர், வீரேந்திர சேவாக் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகளை முகமது ஆசிப் வீழ்த்தி அதிர்ச்சியளித்தார். இருப்பினும், ராபின் உத்தப்பாவின் அசத்தல் அரைசதம் மற்றும் தோனி மற்றும் இர்பான் பதான் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 20 ஓவர்களில் 141 ரன்களை எட்டியது.
141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கடைசி 1 பந்தில் 1 ரன்கள் என்ற நிலையில் ரன் எடுக்காமல் போட்டியை சமன் செய்தது. அதன் பிறகு விக்கெட் ஹிட் முறையில் இந்திய பந்துவீச்சாளர்கள் மூன்று முறை புல்ஸ் அடித்து இந்திய அணி வெற்றி பெற்றது.
6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் :
2007ம் ஆண்டு டி20 உலககோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் யுவராஜ்சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்து யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினார். அன்றைய போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. அதன்பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
View this post on Instagram
அதன்பிறகு ஆஸ்திரேலியா அணியை ஸ்ரீசாந்த் உதவியுடன் வீழ்த்திய இந்திய அணி, பாகிஸ்தானை இறுதி போட்டியில் எதிர்கொண்டது.
இறுதிப்போட்டி :
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சேவாக், யூசுப் பதான் விரைவாக ஆட்டமிழந்ததால் இந்தியா தொடக்கத்தில் தடுமாறியது. கம்பீர் மட்டும் அன்றைய போட்டியில் ஒற்றை ஆளாக போராடி 54 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். அப்போது இளம் வீரராக இருந்த ரோஹித் சர்மா 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்தியா 20 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்தது.
வெற்றிக்காக 158 ரன்களை எடுக்க பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஆர்.பி. சிங் ஆரம்பத்தில் முகமது ஹபீஸ் மற்றும் கம்ரான் அக்மல் ஆகியோரின் விக்கெட்டை அதிவேகமாக கைப்பற்றினார். இர்பான் பதானும் தன் பங்கிற்கு 3 விக்கெட்டுகளை அள்ள, இந்தியா எளிதான வெற்றியைப் பெறுவது போல் தோன்றியது.
ஆனால் மிஸ்பா மட்டும் தனி ஒரு ஆளாகி இந்திய அணிக்கு பயம் காட்டினார். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஜோகிந்தர் சர்மா மீது நம்பிக்கை வைத்த தோனி வீச அழைத்தார். முதல் பந்து வைட் ஆகவும், அதைத் தொடர்ந்து அடுத்த பந்து டாட் பந்தாக விழுந்தது.
அடுத்த பந்து மிஸ்பா சிக்ஸருக்கு பந்தை அனுப்ப போட்டி பாகிஸ்தானுக்கு சாதகமாக மாறியது. நான்கு பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில், மூன்றாவது பந்தில் ஒரு ஸ்கூப் விளையாட முடிவு செய்தார் மிஸ்பா. அது மிஸ்ஸாகி ஸ்ரீசாந்திடம் கேட்சாக இந்திய அணி முதல் டி20 உலகக் கோப்பையை தட்டி தூக்கியது. அன்று கோப்பையை கைப்பற்றிய நாளிலிருந்து இன்று வரை சரியாக 15 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிகழ்வை #15yearsoft20worldcup என்ற ஹேஷ்டேக் மூலம் இந்திய ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
#OnthisDay in 2007, India won the Inaugural T20 World Cup under Mahiya's leadership! ❤️
— Karan singh (@Karan_msdian) September 24, 2017
.#india #indvspak #worldt20 #final #virupanti pic.twitter.com/tlKLHD3Zpi
யாரும் நம்பமுடியாத அணியாக உள்ளே வந்த இந்திய அணி உலகக் கோப்பையை வென்று முத்தமிட்டது. அதன் தொடர்ச்சியே 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல ஆயுதமாக அமைந்தது. இது 1983 உலகக் கோப்பை வென்ற பழம்பெரும் அணியை நினைவுப்படுத்தியது.