Watch Video | கண்ணுல வெறி... நடையில் தெறி.. பாக் போட்டிக்கு கிளம்பிய இந்திய அணியின் மாஸ் வீடியோ!!
உலகக் கோப்பையில் தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடுவதற்காக இந்திய அணி ஹோட்டலில் இருந்து புறப்பட்டது.
இந்தியாவும், பாகிஸ்தானும் எங்கே, எப்போது கிரிக்கெட் விளையாடினாலும் இரு நாட்டு ரசிகர்களிடமும் மிகுந்த பரபரப்பு தொற்றிக்கொள்ளும். இரு நாட்டிலும் அன்றைய ஹாட் செய்தி அதுவாக மட்டுமே இருக்கும். அதுவும் உலகக் கோப்பை போட்டி என்றால் சொல்வதற்கு அவசியமே இல்லை.
இந்த நிலையில், கிரிக்கெட் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கும் இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் இந்த போட்டிக்காக தீவிர பயிற்சிகளை எடுத்து வருகின்றனர்.
உலககோப்பை வரலாற்றில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி இதுவரை வீழ்த்தியதே கிடையாது. இந்த பெருமையை கோலியின் படையும் தக்கவைக்குமா? என்று இந்திய ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில், நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள இந்திய அணியினர் சற்றுமுன் போட்டி நடைபெறும் துபாய் மைதானத்திற்கு தாங்கள் தங்கியுள்ள நட்சத்திர விடுதியில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.
Off we go for our first match of #T20WorldCup #TeamIndia pic.twitter.com/VZp9FmDGC7
— BCCI (@BCCI) October 24, 2021
இந்திய கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. விராட்கோலி தனது பையுடன் முன்னே செல்ல ஜடேஜா, இஷான்கிஷான்,ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோர் முன்னே செல்கின்றனர்.
அவர்களுக்கு பின்னால் ரோகித் சர்மா, ஷர்துல் தாக்கூர், அஸ்வின், வருண் சக்கரவர்த்தி, சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி ஆகியோர் செல்கின்றனர். அவர்களுக்கு பின்னால் இந்திய அணியின் ஆலோசகரும், முன்னாள் இந்திய கேப்டனுமாகிய மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பர் இஷான்கிஷானுடன் பேசிக்கொண்டே வருகிறார். அவர்களுக்கு பின்னால் புவனேஷ்குமார், பும்ரா செல்கின்றனர். இவர்களுடன் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் அணியின் பிற நிர்வாகிகளும் உடன் செல்கின்றனர்.
இந்த டுவிட்டிற்கு கீழ் இந்திய கிரிக்கெட் அணியை பாராட்டி பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்திய வீடியோ வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்