Suryakumar Yadav: டி20யில் அதிவேகமாக 2000 ரன்கள்! விராட் கோலியை சமன் செய்த சூர்யகுமார் யாதவ் - எப்படி தெரியுமா?
சூர்யாகுமார் யாதவிற்கு முன்பாக விராட் கோலி டி20யில் இந்தியாவுக்காக 2000 ரன்களை வேகமாக எட்டி சாதனை படைத்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இரண்டாவது டி20 போட்டி கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.
2 ஆயிரம் ரன்கள்:
இதில், இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா அணி. முதலில் பேட்டிங் செய்தபோது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், டி20யில் அதிவேகமாக 2000 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இது தவிர, டி20 வடிவத்தில் அதிக ரன்கள் எடுத்த நான்காவது இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் படைத்தார்.
சூர்யாகுமார் யாதவிற்கு முன்பாக விராட் கோலி டி20யில் இந்தியாவுக்காக 2000 ரன்களை வேகமாக எட்டி சாதனை படைத்துள்ளார். அதேசமயம், டி20யில் வேகமாக 2000 ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார். இவர் டி20யில் 52 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை மிக வேகமாக எட்டியுள்ளார். இந்த பட்டியலில், பாகிஸ்தானின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வானும் 52 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை எட்டி பாபர் அசாமுடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளார்.
விராட் கோலி சாதனை சமன்:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இரண்டாவது இடத்திலும், சூர்யகுமார் யாதவ் கூட்டாக 2வது இடத்திலும், கேஎல் ராகுல் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இதற்கு முன், கேஎல் ராகுல் இந்த பட்டியலில் 2வது இடத்தில் இருந்த நிலையில் அவரை வீழ்த்தி சூர்யாகுமார் யாதவ் முன்னேறியுள்ளார். சூர்யாகுமார் யாதவ் 56 டி20 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை கடந்து தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் கேஎல் ராகுல் 58 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை கடந்து இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். அதேசமயம் விராட் கோலி டி20யில் 56 இன்னிங்ஸ்களில் விளையாடி 2000 ரன்களை எடுத்துள்ளார். இப்போது சூர்யகுமார் யாதவும், விராட் கோலியும் இந்த பட்டியலில் ஒரே இடத்தில் உள்ளனர்.
சர்வதேச டி20யில் 2000 ரன்களை வேகமாக கடந்த பேட்ஸ்மேன்கள் (இன்னிங்ஸ் அடிப்படையில்)
- 52 இன்னிங்ஸ் - பாபர் அசாம்
- 52 இன்னிங்ஸ் - முகமது ரிஸ்வான்
- 56 இன்னிங்ஸ் - விராட் கோலி
- 56 இன்னிங்ஸ் - சூர்யகுமார் யாதவ்*
- 58 இன்னிங்ஸ் - கே.எல்.ராகுல்.
டி20யில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள்:
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். விராட் கோலி இதுவரை 107 இன்னிங்ஸ்களில் 4008 ரன்கள் எடுத்துள்ளார். இது தவிர, டி20யில் இந்தியாவுக்காக அதிக ரன் குவித்தவர்களில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்தையும், கேஎல் ராகுல் மூன்றாவது இடத்தையும், சூர்யகுமார் யாதவ் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
4008 ரன்கள் - விராட் கோலி (107 இன்னிங்ஸ்)
3853 ரன்கள் - ரோஹித் சர்மா (140 இன்னிங்ஸ்)
2256 ரன்கள் - கேஎல் ராகுல் (68 இன்னிங்ஸ்)
2000* ரன்கள் - சூர்யகுமார் யாதவ் (56 இன்னிங்ஸ்).
மேலும் ஒரு சாதனை:
Suryakumar Yadav the only Indian captain with a fifty in South Africa in T20is.#SuryakumarYadav #SAvIND pic.twitter.com/GqfCZfVBp7
— ✰ (@_sheenuu__63__) December 12, 2023
தென்னாப்பிரிக்க மண்ணில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற டி20யில் அரைசதம் அடித்த ஒரே இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் என்ற சாதனையையும் படைத்தார்.