Suryakumar Yadav:ரசிகர்கள் ஷாக்.. கையில் ஏற்பட்ட காயம்.. டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா சூர்யகுமார் யாதவ்?
கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியா- வங்கதேச அணிகள் விளையாட உள்ள டெஸ்ட் தொடரில் சூர்யகுமார் யாதவ் விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
சூர்யகுமார் யாதவிற்கு காயம்:
இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். இதில் தமிழக அணிக்கு எதிராக விளையாடும் போது சூர்யகுமார் யாதவிற்கு கையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் துலீப் கோப்பையில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
முன்னதாக சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவித்து இருந்தார். அதில், இந்திய டெஸ்ட் அணியில் என்னுடைய இடத்தை உறுதி செய்யும் வகையில் விளையாட விரும்புகிறேன். கடுமையாக உழைத்து புதிதாக வாய்ப்பு பெற்ற இளம் வீரர்கள் தற்போது சிறப்பாக விளையாடி வருகின்றனர். டெஸ்ட் போட்டியில் முன்பே அறிமுகம் ஆகியிருந்தாலும், காயம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாமல் போய்விட்டது. எதிர்வரும் உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சி செய்வேன். பிறகு என்ன நடக்கிறது என்பதை பார்த்துக் கொள்வோம்" என்று கூறியிருந்தார்.
ரசிகர்கள் சோகம்:
இச்சூழலில் தான் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த மாதம் நடைபெற உள்ள இந்தியா மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சூர்யகுமார் யாதவ் விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் உட்பட 10 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அடுத்த சில மாதங்களில் விளையாடுகிறது. ஒருவேளை காயம் சரி ஆனால் அவர் இந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியும் இல்லை என்றால் அவர் ஓய்வு எடுக்கும் சூழல் தான் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.