Kohli Rohit Sharma Rift: ‛அவசரப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது’ - விராட் VS ரோகித் பற்றி கவாஸ்கர் ரியாக்ஷன்!
விராட் கோலிக்கும் ரோகித் சர்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
விராட் கோலிக்கும் ரோகித் சர்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி, 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் டி20 தொடரிலும் விளையாட உள்ளது. டி20 தொடர் விளையாடுவது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.
ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் தென்னாப்ரிகாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்திருக்கும் நேரத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகுவதாக தகவல் வெளியானது. பிசிசிஐ இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் தனிப்பட்ட காரணங்களுக்காக கோலி விலகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளானது.
Virat Kohli has informed that he's not available for the ODI series & Rohit Sharma is unavailable fr d upcoming test. There is no harm in takin a break but d timing has to be better. This just substantiates speculation abt d rift. Neither wil be giving up d other form of cricket.
— Mohammed Azharuddin (@azharflicks) December 14, 2021
இதுகுறித்து கிரிக்கெட் வட்டாரத்தில் முன்னாள் கிரிக்கெட்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன், தனது ட்விட்டர் பக்கத்தில் “ரோஹித் ஷர்மா வரவிருக்கும் டெஸ்டில் விளையாட முடியாது என்றும் விராட் கோலி ஒருநாள் தொடரில் விளையாடவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். ஓய்வு எடுப்பதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அது எந்த நேரத்தில் எடுக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்க வேண்டும். இது பிளவுக்கான ஊகங்களை உறுதிப்படுத்துகிறது. கிரிக்கெட்டின் மற்றொரு வடிவத்தை இருவரும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
'Virat Kohli to address press conference tomorrow' : Vikrant Gupta (@vikrantgupta73), India Today Editor
— IndiaToday (@IndiaToday) December 14, 2021
'What's wrong with a split-captaincy?' : @sardesairajdeep, India Today Editor#TeamIndia #ViratKohli #RohitSharma
Watch #Newstrack with @rahulkanwal pic.twitter.com/1e7pu3hCTr
இதுகுறித்து இந்தியா டுடேவுக்கு பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் “மக்கள் திடீரென அவசரப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது. இரண்டு வீரர்களும் எந்த தகவலும் சொல்லாத நேரத்தில், நாம் முடிவுக்கு வரக்கூடாது. ஆம், அசாருதீன் ஏதோ சொல்லியிருக்கிறார். ஆனால் என்ன நடந்தது என்பது குறித்து அவருக்கு ஏதேனும் தகவல்கள் கிடைத்தால், அவர் வெளியே வந்து நடந்ததைச் சொல்ல வேண்டும்.
இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்கு அற்புதமாக சேவை செய்திருக்கிறார்கள், சரியான தகவல் இல்லாமல், யாரும் அவர்கள் மீது விரல் நீட்டுவது நியாயமானது என்று நான் நினைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பிசிசிஐ அதிகாரி ஒருவர் கோலி குறித்து பேசி இருக்கிறார். “இதுவரை, தென்னாப்ரிக்காவில் நடக்க இருக்கும் ஒரு நாள் தொடரில் இருந்து விலகுவதாக கோலியிடம் இருந்து எந்த கோரிக்கையும் பிசிசிஐயிடம் வைக்கப்படவில்லை. ஒரு வேளை அவருக்கு காயம் ஏற்பட்டிருந்தாலோ, வேறு சில காரணங்களால் விலகுவதாக இருந்தாலோ, அது பற்றி பின்னர் ஆலோசிக்கபப்டும். இப்போதைக்கு, தென்னாப்பரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் கோலி விளையாடுவார் என்றே சொல்ல முடியும்” என தெரிவித்திருக்கிறார்.