SL Vs NED World Cup 2023: முதல் வெற்றியை பறிக்குமா இலங்கை? லக்னோவில் நெதர்லாந்துடன் இன்று மோதல்
SL Vs NED World Cup 2023: ஐசிசி உலகக் கோப்பையின் இன்றைய லீக் போட்டியில் தென்னாப்ரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
SL Vs NED World Cup 2023: லக்னோவில் இன்று நடைபெறும் உலகக் கோப்பையின் 19வது லீக் போட்டியில், இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலகக் கோப்பை:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில், தற்போது வரை 18 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் நியூசிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே முதல் 4 இடங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில், இன்றைய லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ள நெதர்லாந்து, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது.
இலங்கை நெதர்லாந்து மோதல்:
லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இதுவரை விளையாடிய முதல் 3 லீக் போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியுற்றுள்ளது. நெதர்லாந்து அணியோ விளையாடிய கடைசி லீக் போட்டியில் வலுவான தென்னாப்ரிக்கா அணியை வீழ்த்திய உத்வேகத்தில் இன்றைய போட்டியில் களமிறங்க உள்ளது. இதனால், இன்றைய போட்டியிலும் வெற்றிக்காக இரண்டு அணிகளும் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலம் & பலவீனங்கள்:
இலங்கை அணியில் ஏற்கனவே காயம் காரணமாக நட்சத்திர வீரர்கள் விலகிய நிலையில், கேப்டன் தசுன் ஷனகாவும் தொடரின் பாதியில் இருந்து வ்லகியுள்ளார். அனுபவ வீரர்கள் யாரும் இல்லாதது இலங்கை அணியின் பலவீனமாக கருதப்படுகிறது. குசால் மெண்டிஸ் தவிர மற்ற வீரர்கள் யாரும் பேட்டிங்கில் பெரிதும் சோபிக்காதது, அணியின் முக்கிய சிக்கலாக உள்ளது. தொடர்ந்து 3 போட்டியிலும் தோல்வியுற்று இருப்பது இலங்கை அணியை மனதளவிலும் சோர்வாக்கியுள்ளது. நெதர்லாந்து அணியை பொறுத்தவர முதல் 2 போட்டிகளில் தோல்வியுற்றாலும், கடைசியாக விளையாட்ய போட்டியில் வலுவான தென்னாப்ரிக்காவை வீழ்த்தியது. அந்த வெற்றி கொடுத்த உத்வேகத்தில், இன்றைய போட்டியிலும் வெல்லும் முனைப்பில் களமிறங்க உள்ளது.
நேருக்கு நேர்:
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை இரு அணிகளுக் 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ன. அனைத்திலும் நெதர்லாந்தை வீழ்த்தி இலங்கை அணியே வெற்றி வாகை சூடியுள்ளது.
மைதானம் எப்படி?
ஏகானா மைதானம் போட்டியின் தொடக்கத்தில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதாக அமையும். நேரம் செல்ல செல்ல பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களை திணறடிப்பார்கள். டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வதே நல்லது. இந்த மைதானத்தில் ரன் சேர்ப்பது பேட்ஸ்மேன்களுக்கு கடினமானது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் வேட்டை நடத்தலாம்.
உத்தேச அணி விவரங்கள்:
இலங்கை:
பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் ( கேப்டன் ), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, சாமிக்க கருணாரத்ன, துனித் வெல்லலகே, கசுன் ராஜித, மஹீஷ் தீக்ஷன, டில்ஷான் மதுஷங்க
நெதர்லாந்து:
விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ'டவுட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் ( கேப்டன்), லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தத், பால் வான் மீகெரென்