மேலும் அறிய

Shane Warne's 1st Death Anniversary: கிரிக்கெட் உலகின் மறக்க முடியாத துயரமான நாள்: வார்னே மறைந்து இன்றுடன் ஒரு வருடம்..!

ஆஸ்திரேலிய வீரர்களால் மட்டுமல்ல ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தாலும் நேசிக்கப்பட்ட ஷேன் வார்னே மறைந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது.

ஆஸ்திரேலிய வீரர்களால் மட்டுமல்ல ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தாலும் நேசிக்கப்பட்ட ஷேன் வார்னே மறைந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது.  

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான ஷேன் வார்னே கடந்த ஆண்டு இதே தினத்தில் அதாவது மார்ச் மாதம் 4ஆம் தேதி தான் தாய்லாந்தில் தனது 52வது வயதில்  காலமானார். இந்த செய்தி வெளியானதும் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். முதலில் யாரும் இதை நம்பவில்லை, பலர் இது பொய்யாக இருக்கும் என கூட கூறினார்கள். காரணம் ஷேன் வார்னே அனைவராலும் பெரிதும் நேசிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர். 

இது இன்று இந்தியாவுக்கு பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட்டில் தடுமாறி வருவதை பார்க்க முடிகிறது. ஆனாலும் அதன் பந்து வீச்சு மிகச் சிறப்பாக இருக்க காரணம் ஷேன் வார்னேவின் தாக்கம்தான். சுழற்பந்தில் தடம் பதிக்க வேண்டும் என நினைக்கும் ஒவ்வொரு வீரருக்கும் ஷேன் வார்னே நிச்சயம் முன் மாதிரியாக இருப்பார். 

உலகமே உற்று நோக்கும் அளவிற்கு ஷேன் வார்னேவின் சுழற்பந்துக்கு விக்கெட்டை பறிகொடுக்காத வீரரே இல்லை. ஆஃப் சைடில் அல்லது லெக் சைடில் வைடாக போகக் கூடிய பந்து என பேட்ஸ் மேன்கள் நினைப்பதைப்போல் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர்களும் நினைத்து தங்களை தயார்படுத்திக் கொள்ளும் போது, நொடிப் பொழுதில் பந்து ஸ்ட்ம்பை பதம் பார்த்து அம்பையர் உள்பட அனைவரையும் ஆச்சர்யத்துக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாக்கிவிடும். அப்படியான மாயாஜால பந்து வீச்சை தனக்குள் வைத்திருந்தவர் தான் ஷேன் வார்னே. 

இப்படித்தான் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் கடந்த 1993ஆம் ஆண்டு  ஜூன் 4ஆம் தேதி ஓல்ட் டிராஃபோர்டில் உள்ள மைதானத்தில் பந்து வீச ஷேன் வார்னே தயாராக இருந்தார். இது தான் இவரது  முதல் ஆஷஸ் டெஸ்ட் தொடர். ஸ்டிரைக்கில் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் மைக் கேட்டிங் இருந்தார். மைக் கேட்டிங் இப்படி தான் தனது விக்கெட்டை பறிகொடுப்பேன் என ஒரு போதும் நினைத்து இருக்க மாட்டார். 

வார்னே வீசிய பந்து முதலில் நேராகச் செல்வது போன்று இருந்தது. ஆனால் பிட்ச் ஆனதற்குப் பிறகு வலது புறமாக சுழல ஆரம்பித்தது. அப்போது மைக் கேட்டிங் பந்தை தடுப்பதற்காக பேட்டை நகர்த்த ஆனால் மைக் கேட்டிங்கின் கணிப்பை எல்லாம் தவிடு பொடியாக்கி நொடிக்கும் குறைவான நேரத்தில் பந்து ஸ்டெம்ப்பை தாக்கி மைக் கேட்டிங்கிற்கு ”டாடா - பைபை” சொன்னது. இது களத்தில் நடுவராக இருந்த டிக்கி போர்ட் உள்பட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மைக் கேட்டிங் என்ன நடந்தது என புரியாமலே வெளியேறிக் கொண்டு இருந்தார். இந்த பந்து அந்த நூற்றாண்டின் தலை சிறந்த பந்து என வர்ணிக்கப்பட்டது. 

இப்படி இவரால் வெளியேற்றப்பட்ட பேட்ஸ்மேன்கள் மட்டும், 708 பேர். ஆமாம், டெஸ்ட் வரலாற்றில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை வார்னே பெற்றுள்ளார். மொத்தத்தில் , வார்னே 145 டெஸ்ட் போட்டிகளில் 25.41 சராசரியில் 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஏன்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான புகழுக்குச் சொந்தகாரரான ஷேன் வார்னே இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்பதை நம்பித்தான் ஆகவேண்டும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget