Usman Khawaja: ’நீங்க அடி வாங்கியும் திருந்தல”, அன்று ஜான்சன், இன்று கான்ஸ்டாஸ்.. பதிலடி கொடுத்த பவுலர்கள்
Sam Konstas : சாம் கான்ஸ்டாஸ் இந்திய அணி பவுலர் ஜஸ்பிரீத் பும்ராவிடம் வம்பிழுத்த நிலையில் இன்றைய நாளின் கடைசி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஆஸ்திரேலிய அணியின் இளம் பேட்டரான சாம் கான்ஸ்டாஸ் இந்திய அணியின் நட்சத்திர பவுலர் ஜஸ்பிரீத் பும்ராவிடம் வம்பிழுத்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
வம்பிழுத்த கோன்ஸ்டாஸ்:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் நாளின் இறுதி ஓவரை கேப்டன் ஜ்ஸ்பீரித் பும்ரா வீச வந்தார். ஸ்டிரைக்கில் உஸ்மான் கவாஜா இருந்தார், அப்போது பும்ரா தனது பந்து வீச சிறிது நேரம் எடுத்துக்கொண்டார். இதனால் ஆஸ்திரேலிய வீரர் சாம் கான்ஸ்டஸ் பும்ராவை நோக்கி எதோ சில வார்த்தைகள் கூறினார்.
இதையும் படிங்க: BGT 2024 : ரோகித் நீக்கம்.. காரணம் கம்பீர் மட்டுமல்ல! இவரும் தான்.. முழு விவரம்
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் களநடுவர் குறுக்கீட்டு இருவரையும் சமாதானம் படுத்தினார். அதன் பின்னர் போட்டியின் கடைசி பந்தில் உஸ்மான் கவாஜா ஸ்லிப்பில் நின்ற கே.எல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
Fiery scenes in the final over at the SCG!
— cricket.com.au (@cricketcomau) January 3, 2025
How's that for a finish to Day One 👀#AUSvIND pic.twitter.com/BAAjrFKvnQ
அப்போது மொத்த இந்திய அணியும் கான்ஸ்டஸை நோக்கி ஆக்ரோஷமாக கவாஜாவின் விக்கெட்டை கொண்டாடி தீர்த்தனர். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் எந்தவித தவறும் செய்யாத கவாஜா தனது விக்கெட்டை பறிக்கொடுத்தது தான்.
அன்று ஜான்சன், இன்று கான்ஸ்டாஸ்:
இது போன்று சம்பவம் நடப்பது இது முதல் முறை அல்ல, 2010-11 ஆஷஸ் தொடரில் மிட்செல் ஜான்சன் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இடையே இப்படி ஒரு நிகழ்வு நடைப்பெற்றது, அப்போது ஜான்சன், ஜேம்ஸ் ஆண்டர்சனை நோக்கி என்ன விக்கெட் எடுக்க முடியவில்லையா என்று நக்கல் செய்யும் விதமாக பேசினார். அடுத்த பந்திலேயே ஜேம்ஸ் ஆண்டர்சன் ரையன் ஹாரிஸ்சை கிளீன் போல்டாக்கினார். விக்கெட் எடுத்தவுடன் ஜான்சனை பார்த்து ஆக்ரோசமாக கொண்டாடினார் ஆண்டர்சன்.
Bumrah vs Konstas from No Striker reminded this Anderson Mitchell Johnson moment !! pic.twitter.com/UxSLHwbQGa
— 🎰 (@StanMSD) January 3, 2025
அதே போல நிகழ்வு தற்போது கான்ஸ்டஸ் மற்றும் பும்ராவுக்கு இடையில் நடந்துள்ளது, இந்த இரண்டு நிகழ்வுகளிலும் சிக்கி பலியானது என்னவோ எதிர்முனையில் இருந்த பேட்ஸ்மேன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.